• Jan 19 2025

TRP ரேட்டிங்கில் மண்ணைக் கவ்விய விஜய் டிவி.. முதல் 5 இடத்திற்கு கூட வரவில்லையா?

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள்தான் பல இல்லத்தரசிகளுக்கு உயிர் மூச்சாக காணப்படுகிறது. காலை முதல் இரவு தூங்கப் போகும் வரை ஒளிபரப்பாகும்  சீரியல்களில் மூழ்கியே காணப்படுகின்றனர். ஆனாலும் தற்போது இல்லத்தரசிகள் மட்டும் இல்லாமல் இளம் ரசிகர்களும் பொழுது போக்குக்காக சீரியல் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்.

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்றே பெயர் போன சேனல்கள் தான் விஜய் டிவி மற்றும் சன் டிவி. இந்த இரண்டு சேனல்களுக்கு இடையிலும் கடும் போட்டி நிலவி வருகின்றது. அதற்காகவே புதிதாக புதிதாக சீரியல்களை களம் இறக்கி டிஆர்பி ரேட்டிங்கை தக்க வைப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன.

அந்த வகையில் வாராவாரம் தமிழ்நாட்டு டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடங்களை பிடிப்பதற்காக முன்னணி சேனல்களும் போட்டி போட்டு வருகின்றன. 


இந்த நிலையில், கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தை பெற்ற சீரியல்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளன. அதில் வழமை போல சன் டிவி சீரியல்கள் தான் முதல் ஐந்து இடத்தை பெற்றுள்ளன. விஜய் டிவி சீரியலான சிறகடிக்க ஆசை சீரியல் ஆறாவது இடத்தை பெற்றுள்ளது.

கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பெற்று ஒரு சில வாரங்களுக்கு தக்க வைத்திருந்தது. ஆனாலும் தற்போது மீண்டும் சரிவை சந்தித்து தற்போது ஆறாவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement