• Dec 04 2024

ஜிவி பிரகாஷின் ஆத்மார்த்த இசையில் வெளியான'ஹே மின்னலே.. ' எஸ்கேக்கு ரொமான்ஸ் அள்ளுதே..

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

முகுந்தன் என்ற ராணுவ வீரரின் பயோபிக்கை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் அமரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் முதன் முதலாக ராணுவ வீரராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி களம் இறங்கி உள்ளார்.

அமரன் படத்தை கமலஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இதனை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் கதாநாயகியான சாய் பல்லவியின் கேரக்டரை அறிமுகம் செய்து வைத்தார்கள். அதில் இந்து என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அதே சமயம் ராணுவ வீரர் முகுந்தனின் மனைவி இந்துவையையும் காட்சிப்படுத்தியிருந்தார்கள் படக்குழுவினர்.


இந்த நிலையில், அமரன் படத்தில்  லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. ஹே மின்னலே என்ற இந்தப் பாடல் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் காதலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. 

மேலும் முதல் நாள் கல்லூரிக்கு வரும் சாய் பல்லவியின் வரவை இந்தப் பாடல் மிக அழகாக பதிவு செய்துள்ளது. சிவகார்த்திகேயன் சாய்பல்லவிக்கு இடையிலான காதல் காட்சிகள் சிறப்பாக காட்டப்பட்டுள்ளது.  இந்த பாடல் ஜிவி பிரகாஷின் 700ஆவது பாடலாக அமைந்துள்ளதாம்.


Advertisement

Advertisement