• Jan 19 2025

ஹலமதி ஹபிபோ... மீண்டும் மேஜிக் பண்ணுவோம்..! பூஜா ஹெக்டே வெளியிட்ட க்யூட் போட்டோஸ்

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடிப்பில் இறுதியாக கோட் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். அத்துடன் இந்த படத்தில் முன்னணி நடிகர்கள் பலரும் நடித்திருந்தார்கள். இந்த படம் கிட்டத்தட்ட 500 கோடிகளை கடந்து வசூலில் சாதனை படைத்திருந்தது.

கோட் திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை அள்ளும் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனாலும் அந்த கனவு நிறைவேறாவிட்டாலும் தளபதி தன்னுடைய 69 ஆவது படத்தில் அந்த சாதனையை புரிவார் என்று அவருடைய ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகின்றார்கள்.

கோட் படத்தை தொடர்ந்து இளையதளபதி தன்னுடைய கட்சிப் பணிகளில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றார். ஆனாலும் தளபதி 69  ஆவது படத்திற்கு தடபுடலாக ரெடியாகி உள்ளார். அதன்படி இன்றைய தினம் படத்தின் பூஜைகள் மிகவும் எளிமையாக நடந்தது.


ஏற்கனவே எச். வினோத் இயக்கத்தில் வெளியான சதுரங்க வேட்டை, நேர் கொண்ட பார்வை, வலிமை, துணிவு, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.. அந்த வகையில் தற்போது தளபதி 69 ஆவது படமும் மிகுந்த எதிர்பார்ப்பில் காணப்படுகின்றது.

இந்த நிலையில், தற்போது தளபதி 69 படத்தில் ஹீரோயினாக களம் இறங்கியுள்ள பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டா  பக்கத்தில் இன்றைய படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தமது லைக்குகளை அள்ளி வீசி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement