• Dec 21 2024

ஷாலினி ஜோயாவை வெளியேற்றிய விஜய் டிவி..! ரத்தக் கண்ணீர் வடிக்கும் பேன்ஸ்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் புதிது புதிதாக ரியாலிட்டி ஷோக்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. அதிலும் ஒரு சீசன் வெற்றி பெற்று விட்டால் அடுத்த சீசன்கள் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகி வருகின்றன.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக ஐந்தாவது சீசனில் ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த போட்டியாளராக ஷாலினி ஜோயா காணப்படுகின்றார்.

இவர் ஒரு சில ஷார்ட் பிலிம்ஸ்களை இயக்கி உள்ளதோடு டான்சராகவும் நடிகையாகவும் காணப்படுகின்றார். அது மட்டும் இன்றி பல சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார்.


குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவரது சமையல் மட்டும் அல்லாமல் இவர் பேசும் தமிழும் பலராலும் ரசிக்கப்பட்டு வருகின்றது. ஆனாலும் ஒரு சில சமயங்களில் இவர் ஏனையவர்களை மதிக்காமல் கதைப்பதும் அதிருப்தியை  ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 5 இருந்து தற்போது ஷாலினி ஜோயா எவிட் ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. இதை அறிந்த ஷாலினி ஜோயாவின் ரசிகர்கள் ரத்தக்கண்ணீர் வடித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement