• Jan 19 2025

காத்து வாங்குறதுக்கு இப்படி கூட வழி இருக்கா.. விஜய் டிவி ஃபரீனாவை கலாய்க்கும் ரசிகர்கள்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவி, சன் டிவி உட்பட பல தொலைக்காட்சிகளில் சீரியல்களிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து  கொண்ட பரீனா சமீபத்தில் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் வீடியோவுக்கு ஏராளமான கேலியும் கிண்டலுமான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

விஜய் டிவி, சன் டிவி, ஜீ டிவி மற்றும் ராஜ் டிவி ஆகிய தொலைக்காட்சிகளில் முதலில் தொகுப்பாளினியாக அறிமுகமான பரீனா, அதன்பின் சன் டிவியில் ஒளிபரப்பான ’அழகு’ என்ற சீரியல் மூலம் நடிகையாக மாறினார் . ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்து பரீனா பிரபலமானார் என்பதும் ’மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை’ ’கலக்கப்போவது யாரு’உள்பட சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் ’குக் வித் கோமாளி’ சீசன் 5 நிகழ்ச்சியில் கோமாளியாக இடம் பெற்றுள்ளார் என்பதும் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் ’உப்பு புளி காரம்’ என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் பரீனாவுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ள நிலையில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்து வருவார். குறிப்பாக கர்ப்பமான நேரத்தில் தனது கிளாமரான கர்ப்பிணி புகைப்படத்தை பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் அதன் பின்னர் தான் தற்போது பல நடிகைகள் கர்ப்பிணி போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் படகில் சாய்ந்து உட்கார்ந்து காற்று வாங்கும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் இந்த வீடியோவை பார்த்து பலர் இன்ப அதிர்ச்சி ஆகியுள்ளனர். குறிப்பாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குரேஷி ’எனக்கு தெரிஞ்சு ரிஸ்க்கான ரீல் பண்றதில்ல நம்பர் ஒன் நீதான்’ என்று பதிவு செய்துள்ளார். மேலும் ’இருந்தாலும் உனக்கு ரொம்ப தைரியம் மாப்பிள்ளை’ என்றும் ’காத்து வாங்குவதற்கு இப்படி கூட வழி இருக்கா’ என்றும் என்பது போன்ற பல கமெண்ட்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement