தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் வெளியான இரண்டாவது நாள் துல்கர் சல்மான் படம் வெளியாக இருப்பதாகவும் அதனை அடுத்து ஒரே வாரத்தில் மோகன்லால் படம் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் கேரளாவில் ’கோட்’ படத்திற்கு சிக்கல் என கூறப்படுகிறது.
’கோட்’ படத்திற்கு போட்டியாக தமிழில் வேறு படங்கள் வெளியாக வாய்ப்பில்லை என்ற நிலையில் அண்டை மாநிலங்களில் போட்டியாக சில படங்கள் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக துல்கர் சல்மான் நடித்த ’லக்கி பாஸ்கர்’ என்ற மலையாள திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு புதிய போஸ்டரும் வெளியாகி உள்ளது.
விஜய் படங்களுக்கு கேரளாவில் ஒரு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் என்ற நிலையில் ’கோட்’ படம் வெளியான இரண்டாவது நாளே ’லக்கி பாஸ்கர்’ படம் வெளியானால் ’கோட்’ படத்தின் வசூல் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ’லக்கி பாஸ்கர்’ படம் பான் இந்திய திரைப்படமாக வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் தமிழிலும் செப்டம்பர் 7ஆம் தேதி அந்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டும் இன்றி செப்டம்பர் 12ஆம் தேதி மோகன்லால் நடித்த ’பராஸ்’ என்ற திரைப்படமும் வெளியாக உள்ளது. மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்து அவரே இயக்கிய இந்த படமும் கேரளாவில் அதிகமாக அளவிலான திரையரங்குகளை ஆக்கிரமித்துக் கொள்ளும் என்றும் அப்போது ’கோட்’ படத்திற்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் விஜய்க்கு கேரளாவில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதால் முதல் இரண்டு நாளிலேயே ’கோட்’ திரைப்படம் கேரளாவில் மிகப்பெரிய வசூலை பெற்றுவிடும் என்றும் அதன் பின்னர் துல்கர் சல்மான், மோகன்லால் படம் வந்தாலும் திருப்தியான வசூலை செய்யும் என்றும் கேரள மாநில விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!