அஜித்தின் 50வது திரைப்படம் 'மங்காத்தா’ மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் விஜய்யின் 50வது திரைப்படம் ’சுறா’ படுதோல்வி அடைந்த நிலையில் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான ’மகாராஜா’ படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த படத்தின் ரிசல்ட் என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
விஜய் சேதுபதி நடிப்பில் நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவான ’மகாராஜா’ என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ் க்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படம் ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 9 நாட்களுக்கு முன் மட்டும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தை எப்படி மக்கள் மத்தியில் கொண்டு செல்ல போகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.
#Maharaja
— Nithilan Saminathan (@Dir_Nithilan) June 5, 2024
From June 14th
@VijaySethuOffl #VJS50 pic.twitter.com/zASbuIUjxy
Listen News!