விடாமுயற்சி திரைப்படம் இன்றைய தினம் வெளியான நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் படம் பற்றிய தமது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றார்கள். ஆனாலும் இதுவரையில் விடாமுயற்சி படத்திற்கு பலரும் தமது பாசிட்டிவ் விமர்சனங்களை அளித்துள்ளனர்.
பிரேக்டவுன் என்ற ஆங்கில படத்தின் ரீமேக்காக விடாமுயற்சி படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த படத்தில் அஜித் முற்றிலும் மாறுபட்ட ஒரு மனிதராக காணப்படுகின்றார். வழமையாக அவருக்கு காட்டப்படும் மாஸ் என்ட்ரி, மாஸ் இன்றோ எதுவுமே இதில் காணப்படவில்லை.
சாதாரண மனிதனுடைய வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகளை அவர் எவ்வாறு முகம் கொள்வார், எவ்வாறு எதிர்த்து நிற்பார் என்பதை எடுத்துக்காட்டும் விதத்திலேயே மகிழ் திருமேனி இதன் திரைக்கதையை கொண்டு நகர்த்தி உள்ளார். ஆனாலும் பார்ப்பவர்களை சலிப்படைய வைக்காமல் படம் வெற்றி பெற்று உள்ளது.
மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு அஜித், திரிஷா, அர்ஜுன் கூட்டணியில் இந்த படம் வெளியாகி உள்ளது. மங்காத்தா திரைப்படத்தை விடவே இந்த படம் அதிக மாஸ் காட்டி இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.
இந்த நிலையில், விடாமுயற்சி படத்தை பார்த்து வெளியில் வந்து தமது கருத்துக்களை கூறிய ரசிகர்கள், கடவுளே.. அஜித்தி..என கூச்சலுடன் அஜித் போல விஜய் ஆல் நடிக்கவே முடியாது என தெரிவித்துள்ளனர்.
அஜித், விஜய்யின் படம் ரிலீஸ் ஆனால் அவர்களுடைய ரசிகர்கள் செய்யும் அலப்பறைகளுக்கு முடிவில்லாமல் இருக்கும். அந்த வகையிலேயே தற்போது அஜித்தை போல் விஜயால் நடிக்கவே முடியாது என தல ரசிகர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!