• Feb 06 2025

அஜித் போட்டுத்தள்ள சொன்னதே த்ரிஷாவா.? விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி.. முழு விமர்சனம்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாசிட்டிவ் விமர்சனங்களை தெறிக்க விட்டு வருகின்றது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் நடிப்பில் இந்த திரைப்படம் வெளியானதால் அவருடைய ரசிகர்கள் பிரம்மாண்டமாக செலிப்ரேட் பண்ணி வருகின்றார்கள்.

இந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படம் அவருக்கு வெற்றியை கொடுத்ததா? இல்லை என்றால் இது வீண் முயற்சியா? என்பதை திரைவிமர்சனத்தின் ஊடாக விரிவாக பார்ப்போம்.

அந்த வகையில் விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித்- திரிஷா இருவருமே காதலித்து திருமணம் செய்து கொள்கின்றார்கள். இவர்களுடைய வாழ்க்கை அழகாக சென்று கொண்டிருந்த நிலையில், திரிஷாவின் கர்ப்பம் ஒரு முறை கலைந்து விடுகின்றது. இதனால் அவர்களுக்குள்ளே விரிசல் ஏற்பட்டு விவாகரத்து செய்வதற்காக முடிவு எடுத்தனர். அந்த நேரத்தில் தான் தனது அம்மா வீட்டுக்கு போக வேண்டும் என திரிஷா முனைய, தானே கொண்டு போய் டிராப் பண்ணுவதாக அஜித் அவருடன் செல்கின்றார்.


கிட்டத்தட்ட 9 மணி நேர பயணத்தில் நடக்கும் சம்பவங்களை தான் சுவாரஸ்யமாக இந்த படம் எடுத்துக்காட்டி உள்ளது. அதில் ஒரு இடத்தில் அஜித், த்ரிஷாவும் செல்லும் கார் பிரேக் டவுன் ஆக அங்கு அர்ஜுன், ரெஜினா தம்பதிகள் உதவி செய்வது போல த்ரிஷாவை மட்டும் ஏற்றிச் செல்லுகின்றார்கள்.

ஆனால் அதில் திரிஷா காணாமல் போகவே அஜித் அர்ஜுனை தேடி அலைந்து அவரை கண்டுபிடிக்க, இறுதியில் நீங்கள் யார் என்றே தெரியாது என அர்ஜுன் சொல்லுகின்றார்.

இதனால் அஜித் போலீசாரை நாடியும் எந்த பயணும் கிடைக்கவில்லை. பின் அஜித்தை ஆரவ் அடித்து அர்ஜுனிடம் அழைத்து செல்ல, அங்கு தான் பெரிய ட்டுவிஸ்டே இருக்கின்றது. ரெஜினாவும் அதன் பின்பு அஜித்தை த்ரிஷா கண்டுபிடித்தாரா? இறுதியில் ரெஜினா சொன்னது உண்மையா என்பது தான் மீதிக்கதையாக காணப்படுகின்றது.

மேலும் இந்த படத்தில் திரிஷா தான் மொத்த பிரச்சனைகளுக்கும் காரணம். அர்ஜுன், ரெஜினா உடன் சேர்ந்து அஜித்தை கொல்ல அவர்தான் திட்டம் போட்டுள்ளார் என்றும், இதுதான் இடைவேளை காட்சியில் மிகப்பெரிய திருப்பமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.


இந்த படத்தில் நடிகர் அஜித் வழமையாக நடிக்கும் மாஸ் ஹீரோவாக காட்டப்படாமல் சாதாரணமாக அவருடைய வயதுக்கு ஏற்ற பக்குவ நிலையில் நடித்துள்ளார். இது பலராலும் பாராட்டத்தக்க விதமாக காணப்படுகின்றது. அதில் ஒரு மனிதனுக்கு ஒரு பிரச்சனை வந்தால் அவருடைய தைரியத்திற்கு ஏற்ற வகையில் என்ன செய்வாரோ அதன்படியே இந்த கதையை உருவாக்கியுள்ளார் மகிழ் திருமேனி.

மேலும் இந்த படத்தில் அஜித் திரிஷாவின் ஜோடி இளமையான தோற்றத்திலும், த்ரிஷா வீட்டிற்கு போகவேண்டும் என கூறிய ஆரம்பித்து அவர்களுடைய பயணம் ஆகியவை சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.


அதிலும் ஆரவ் கேங்க் செய்யும் அட்டகாசம், அதன்பின்னரான அர்ஜுன், ரெஜினா வருகை, த்ரிஷா காணாமல் போன போது ஏற்பட்ட பதட்டம் ஆகியவை ரசிகர்களை சற்றும் கண் அசராமல் பார்க்க வைத்துள்ளது. மேலும் இந்த படத்தில் ரெஜினாவுக்கும் முக்கிய பங்கு காணப்படுகிறது.

இந்த படத்தின் மிகப்பெரிய பலமாக அனிருத் இசை காணப்படுகின்றது. மெதுவாக நகரும் காட்சிகளுக்கு கூட அவருடைய பின்னணி இசை பக்க பலமாக இருந்தது. அதிலும் அவர் கிளைமாக்ஸ் காட்சியில் அவர் போட்ட பத்திக்கிச்சு சாங் விருந்தாகவே காணப்படுகிறது.

மேலும் ஆரவுடன் காரில் நடக்கும் சண்டைக் காட்சியும் தியேட்டர்களை தெறிக்கவிடப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த படத்தில் இரண்டாவது பாதியில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு கூட்டி இருக்கலாம் என ரசிகர்கள் தெரிவித்த கருத்துக்களும் தற்போது கவனிக்கப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement