• Jan 19 2025

என் பொண்டாட்டிய கரெக்ட் பண்ண ஒரு ஐடியா கொடுங்க.. பரிதாபமாக கேட்கும் விஜய் ஆண்டனி..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர் மற்றும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி ’என் பொண்டாட்டியை கரெக்ட் பண்ண ஒரு ஐடியா கொடுங்க’ என விடிவி கணேஷ் இடம் கேட்கும் வசனத்துடன் கூடிய ’ரோமியோ’ திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விஜய் ஆண்டனி தயாரித்து நடித்து முடித்துள்ள திரைப்படம் ’ரோமியோ’ என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இந்த ட்ரெய்லரில் விஜய் ஆண்டனி, விடிவி கணேஷிடம் என் பொண்டாட்டியை கரெக்ட் பண்ண ஐடியா கொடுங்க என்று பரிதாபமாக கேட்கும் காட்சி உள்ளது.

மேலும் லவ் ஐடியா கொடுக்கும் கேரக்டரில் யோகி பாபு நடித்திருக்கும் இந்த படத்தில் மிருணாளினி ரவி நாயகியாக நடித்துள்ளார் என்பதும் இளவரசு, தலைவாசல் விஜய், சுதா உள்பட பலர் நடித்திருக்கும் இந்த படத்தை விநாயகர் வைத்தியநாதன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ட்ரைலரில் பெண் பார்க்க செல்லும் விஜய் ஆண்டனிடம் சில நிபந்தனைகள் மிருணாளினி ரவி விதிக்க, அதற்கு விஜய் ஆண்டனி ஒப்புக் கொண்ட, திருமணத்திற்கு பின்னர் ’எனக்கு சரக்கு அடிக்கணும், சரக்கு வாங்கிட்டு வா’ என்று மனைவி சொல்வதும் அதன் பிறகு ஏற்படும் பிரச்சனைகள் தான் இந்த படத்தின் கதையாக உள்ளது.

விஜய் ஆண்டனியின் பொண்டாட்டியை கரெக்ட் பண்ண  விடிவி கணேஷ் கொடுக்கும் ஐடியா வொர்க் அவுட் ஆனதா என்பது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்று தெரிகிறது. ஒரு ஜாலியான, காமெடியான, ரொமான்ஸ் படமாக ’ரோமியோ’ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement