• Apr 27 2024

த்ரிஷாவை முந்தி காட்டுறேன்.. சசிகுமாருடன் இணைந்து நயன் எடுத்த சபதம்..!

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

நயன்தாரா மற்றும் த்ரிஷா இருவரும் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தான் என்ட்ரி ஆனார்கள் என்பதும் இருவரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரையுலகில் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தொடர்ச்சியாக வெற்றிப் படங்கள் கொடுத்து வந்த நயன்தாரா, சமீப காலமாக தோல்வி படங்களை கொடுத்து வருகிறார் என்பதும் அவர் மிகவும் எதிர்பார்த்த ’அன்னபூரணி’ திரைப்படம் கூட அவருக்கு கை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தோல்வி படங்களாக கொடுத்துக் கொண்ட த்ரிஷா, ’பொன்னியின் செல்வன்’ வெற்றிக்கு பிறகு தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பாக அஜித், கமல்ஹாசன், மோகன்லால், சிரஞ்சீவி என பெரிய நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தன்னுடன் திரை உலகிற்கு வந்த த்ரிஷா தற்போது பிஸியாக முன்னணி இடத்தில் இருக்கும் நிலையில் தன்னை திரையுலகினர் கிட்டத்தட்ட ஒதுக்கி விட்டதாக கருதிய நயன்தாரா மீண்டும் ஒரு ஹிட் படம் கொடுக்க சசிகுமார் உடன் இணைந்துள்ளதாக தெரிகிறது.

சசிகுமார் இயக்க இருக்கும் நாயகிக்கு முக்கியத்துவம் குறித்த படம் ஒன்றில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் இந்த படம் நயன்தாராவின் திரை உலக வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே மாதவன் உடன் அவர் ’தி டெஸ்ட்’ என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் அந்த படம் வெற்றியானால் நயன்தாரா மீண்டும் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை தக்க வைத்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement