• Jun 22 2025

துவைச்சு காயப்போட்ட மாதிரி ஒரு கண்றாவி காஸ்ட்யூம்.. ஸ்ருஷ்டி டாங்கேவை கலாய்த்த நெட்டிசன்கள்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ஸ்ருஷ்டி டாங்கே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த புகைப்படங்களை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு ’காதலாகி’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருஷ்டி டாங்கே. அதன் பிறகு ’யுத்தம் செய்’ ’டார்லிங்’ ’எனக்குள் ஒருவன்’ ’கத்துக்குட்டி’ ’வில் அம்பு’ ’ஜித்தன் 2’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

இருப்பினும் அவருக்கு சொல்லிக் கொள்ளும் வகையில் எந்த வெற்றி படமும் அமையாத நிலையில் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்ட போது தான் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான சர்வைவல் நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருஷ்டி டாங்கே சற்றுமுன் கருப்பு கலரில் முசுமுசு என இருக்கும் காஸ்ட்யூம் அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஒரு பக்கம் ஆயிரக்கணக்கான லைக் மற்றும் பாசிட்டிவ் கமெண்ட்ஸ் கிடைத்தாலும் நெகட்டிவ் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது.

துவைச்சு போட்ட மாதிரி ஒரு கன்றாவி காஸ்ட்யூம் என்றும், கேவலமாக இருக்கிறது என்றும் ஒரு சில நெகட்டிவ் கமெண்ட்கள் பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் கன்னத்தில் குழி விழும் அந்த சிரிப்புக்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம் போன்ற பாசிட்டிவ் கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.


Advertisement

Advertisement