• Jan 18 2025

விஜய் படத்தில் விஜயகாந்த்... அதிர்ச்சியில் ரசிகர்கள்... வெங்கட் பிரபுவின் தரமான சம்பவம்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் முன்னணி இடத்தை பிடிப்பதற்கு எஸ்ஏ சந்திரசேகர் முக்கிய காரணம். அவரது இயக்கத்தில் தான் கேப்டன் நிறைய படங்கள் நடித்து ஒரு மிகப்பெரிய ஹீரோ அந்தஸ்தை பிடித்தார். இந்நிலையில் தனது வாரிசை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என்று விஜயகாந்தின் படத்தில் விஜய் நடிக்க வைத்தார் எஸ்ஏசி.


விஜய் ஹீரோவாக நடித்த படங்களில் எஸ்ஏசி கேட்டுக் கொண்டதன் பெயரில் கேப்டன் கேமியோ தோற்றத்தில் நடித்தார். இந்நிலையில் விஜய் அதன் பிறகு படிப்படியாக உயர்ந்து இப்போது மாஸ் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். கேப்டனின் மறைவை தொடர்ந்து அவரது இறுதி அஞ்சலியில் விஜய் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். 


கேப்டனை கௌரவிக்கும் விதமாக தளபதி ஒரு சம்பவம் செய்ய உள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கேப்டனும் நடிக்க இருக்கிறார்.

அது எப்படி கேப்டன் நடிப்பார் என ரசிகர்கள் குழம்பி இருக்கும் வேலையில் இயக்குனர் AI டெக்னாலஜி மூலம் கேப்டனை படத்தில் கொண்டு வர இருக்கிறார்கள். இது குறித்து கேப்டன் இடம் வெங்கட் பிரபு பேசி அனுமதி வாங்கியுள்ளார். மேலும் விஜயகாந்தின் குடும்பம் ஒரு கண்டிஷன் உடன் இதற்கு சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள்.


அதாவது கோட் படத்தில் விஜயகாந்த் இடம் பெறும் காட்சி ரிலீசுக்கு முன்பே தங்களிடம் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கு வெங்கட் பிரபு சம்மதித்த நிலையில் விஜயகாந்த் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது.

விஜய் கேப்டன் வாரிசுகளுக்கு எந்த உதவியும் செய்யவில்லையே என ஒரு பேச்சு சென்ற நிலையில் நன்றிகடனுக்காக விஜயகாந்தை தன் படத்தின் இடம்பெற செய்யவுள்ளார் நடிகர் விஜய். 

Advertisement

Advertisement