• Jan 18 2025

நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்ட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.... கயல் ஆனந்தி வைட் ரோஸ் வேற லெவல் ஹிட் தான்

Kamsi / 11 months ago

Advertisement

Listen News!

தெலுங்கில் பஸ் ஸ்டாப் என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் கயல் ஆனந்தி. தமிழில் 2014ல் வெளியான பொறியாளன் படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.அதனைத் தொடர்ந்து பிரபு சாலமன் இயக்கிய கயல் படத்தில் நாயகியானார். இந்தப் படத்தின் மூலம் பிரபலமடைந்ததால் கயல் ஆனந்தி என்றே ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.


 இவர் தமிழில் அதிகளவான படங்களை  கொடுக்கா விட்டாலும் , இவருடைய சிரிப்பு , மேக்கப் போடாமல் ரியலாகவே நடிக்கும் அந்த இயற்கை அழகு என இவருக்கு என்று பல ரசிகர் பட்டாளமே உண்டு . பரியேறும் பெருமாள் படத்தில் அவரது ஜோதி கேரக்டர் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், தற்போது இராவண கோட்டம் என்ற படத்தில் சாந்தனு ஜோடியாக நடித்துள்ளார்.


இதனை தொடர்ந்து அறிமுக இயக்குனர் ராஜசேகர் இயக்கத்தில் ஆனந்தி நடிக்கும் திரில்லர் திரைப்படம் 'வைட்  ரோஸ்'. இந்த படத்தை பூம்பாரை முருகன் புரொடக்சன்ஸ்  தயாரிக்கிறது. இந்த படத்தில் ஆர்.கே.சுரேஷ், விஜித், ரூசோ ஶ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement