• Apr 01 2025

வெங்கட்பிரபுவின் தரமான ‘கோட்’ பட அப்டேட்.. அஜித் பட அறிவிப்புக்கு போட்டியா?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

அஜித், விஜய் ஆகிய இருவரும் தனிப்பட்ட முறையில் நண்பர்களாக இருந்தாலும் தொழில் அளவில் இருவரும் சரியான போட்டியாளர்கள் என்பதும் ஒருவரது படம் குறித்த அப்டேட் வந்தால் அடுத்த சில மணி நேரங்களில் இன்னொருவரின் படத்தின் அப்டேட் வரும் என்பதையும் சில ஆண்டுகளாக பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் அஜித் நடிக்கும் 63 வது திரைப்படமானகுட் பேட் அக்லிஎன்ற திரைப்படத்தின் அறிவிப்பு நேற்று வெளியான நிலையில் இந்த அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நேரத்தில் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில்கோட்படத்தின் அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்று அறிவித்து விஜய் ரசிகர்களை குஷியாக்கியுள்ளார்.

இதனை அடுத்து அஜித் படத்தின் அறிவிப்புக்கு போட்டியா சார்? என்று ரசிகர்கள் அவரிடம் கமெண்ட் பகுதியில் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமூக வலைதளங்களில் அஜித், விஜய் படங்களின் அறிவிப்பு வெளியாகும் போதெல்லாம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும், குறிப்பாக விஜய் படங்களின் அப்டேட்டுக்கள் அவ்வப்போது வந்தபோதெல்லாம் அஜித் திடீரென ஒரு சில புகைப்படங்களை மட்டும் எடுத்து வெளியிட்டு விஜய் படத்தின் பரபரப்பை அடக்கி விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் பதிலடியாக தற்போது அஜித் படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில்கோட்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என்று வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். அனேகமாக இன்னும் ஒரு சில நாட்களில்கோட்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement