• Jul 17 2025

Mrs & Mr வயதானவர் படம்னா? அப்ப 'டூரிஸ்ட் பேமிலி’ என்னது? – வனிதாவின் அதிரடிக் கருத்து!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் எப்போதுமே, நேர்மையோடும் தன்னம்பிக்கையோடும் பேசும் நடிகை வனிதா விஜயகுமாரின் புதிய திரைப்படமான ‘Mrs & Mr’ தற்போது வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் நடிகை வனிதா மற்றும் ராபர்ட் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானதையடுத்து இணையத்தில் ரசிகர்களிடையே மாறுபட்ட கருத்துகள் உருவாகி வருகின்றன.


 சிலர், “இது என்ன முதியவர்கள் நடிக்கும் காதல் படம் மாதிரி இருக்கு!” என விமர்சனம் செய்து உள்ளனர். இந்த விமர்சனங்களுக்கு வனிதா கொடுத்த பதில் தான் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.


‘Mrs & Mr’ படத்தின் ட்ரெய்லர் வெளியான உடனே, சில YouTube விமர்சகர்கள், Instagram pages மற்றும் X தளங்களில் சிலர் வயதானவர்கள் நடிக்கிறார்கள் என்று கலாய்த்தனர். இது குறித்து வனிதா சமீபத்தில் அளித்த பேட்டியில், “எங்க படத்தோட ட்ரெயிலரைப் பார்த்த உடனே ‘முதியவர்கள் கொண்டாடும் வெற்றின்னு நக்கலா சொல்லுறாங்க. அப்ப ‘டூரிஸ்ட் பேமிலி’ படம் மட்டும் என்ன? அதில நடிச்சவங்க எங்களவிட வயசானவங்க தான்!” என்றார். இது தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் பல கருத்துகளை எழுப்பியுள்ளது.


Advertisement

Advertisement