• Jan 19 2025

'என்னை பற்றி கேவலமாக பேசி பாலியல் அவமரியாதை செய்துள்ளார்' மன்சூர் அலிகான் மீது குற்றம்சாட்டிய த்ரிஷா! நடந்தது என்ன?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை த்ரிஷா, தன்னை காணொளி ஒன்றின் மூலம் மிகவும் கேவலமாக பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார்.

அதன்படி, சினிமா நட்சத்திரங்களை பற்றி அவ்வப்போது சர்ச்சைகளை ஏற்படுத்தும் மன்சூர் அலிகானை பற்றி முன்னணி நடிகையான த்ரிஷா திடீர் என, சமூக வலைத்தளத்தில் போட்டுள்ள பதிவு ஒன்று தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

தமிழ் திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி தற்போது காமெடியனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் கலக்கிக் கொண்டிருப்பவர் மன்சூர் அலிகான். இவர் நடிப்பில் சமீபத்தில் லியோ திரைப்படம் வெளியானது.  அதை தொடர்ந்து, லியோ படத்தில், இவருக்கு மக்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து ஒரு நிமிடம் கண் கலங்கி லியோ சக்ஸஸ் மீட்டில் அழுதார். 


இந்த நிலையில், மன்சூர் அலிகான் பற்றி நடிகை த்ரிஷா, போட்டுள்ள பதிவு  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதன் படி நடிகை த்ரிஷா கூறுகையில், ஒரு வீடியோ என் கவனத்துக்கு வந்தது. இதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். மேலும் இது பாலியல், அவமரியாதை, பெண் வெறுப்பு, மற்றும் மோசமான ரசனையைக் காண்கிறேன். அவர் ஆசைப்படலாம் ஆனால் நான் அவரைப் போன்ற பரிதாபத்திற்குரிய ஒருவருடன் திரையில் பகிர்ந்து கொள்ளாததை நல்லது என நினைக்கிறன். மேலும் என் திரையுலக வாழ்க்கையில் அது ஒருபோதும் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். இவரைப் போன்றவர்கள் மனித குலத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள் என பதிவிட்டுள்ளார்.


அதாவது சமீபத்தில் மன்சூர் அலிகான் கொடுத்த பேட்டியில், லியோ படத்தில் வில்லன் என்றதும், கண்டிப்பாக ரேப் சீன் இருக்கும், குஷ்பூ, ரோஜா போன்றவர்களை கட்டிலில் தூக்கி போட்ட மாதிரி நடிக்கலாம் என நினைத்தேன். ஆனால் த்ரிஷாவை பொத்துன மாதிரி காஷ்மீருக்கு கூட்டிட்டு போட்டு, கூட்டிட்டு வந்துட்டாங்க, கண்ணுல கூட காட்டவில்லை என தெரிவித்திருந்தார். இந்த பேட்டி தான் இப்போது சர்ச்சையாகி உள்ளது.

Advertisement

Advertisement