• Oct 30 2024

பிரதீப் என்னை அறைந்ததற்கு இது மட்டும் தான் காரணம்- முதன்முறையாக உண்மையை உடைத்த கவின்

stella / 11 months ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. இதில் முக்கிய போட்டியாளராக பிரதீப் என்பவர் பங்கு பற்றி வருகின்றார். இவர் நடிகர் கவினின் நெருங்கிய நண்பன் என்பதும் யாவரும் அறிந்ததே. கவினின் டாடா படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் சூப்பராக விளையாடி வந்தார். இதனால் இவர் தான் டைட்டில் வின்னர் ஆக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கூறி இருந்தனர்.அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்கிற பழமொழிக்கு ஏற்ப, ஓவராக பிக்பாஸ் வீட்டில் பொல்யூட் செய்து விளையாடியதால், இன்றையதினம் ஒரேயடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். 


இந்நிலையில் இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் தன்னுடைய நண்பன் கவினை பிக்பாஸ் வீட்டின் உள்ளே பார்க்க வந்தபோது, கவினை அடித்திருந்தார். இவர் கவினை அடித்தது தவறு என சமூக வலைத்தளங்களில் வாதிடப்பட்டு வந்தது.அந்த சமயத்தில் லாஸ்லியாவை கவின் காதலித்து வந்ததால், ஒருவிதமான நெகட்டிவ் இமேஜ் இருந்தது, எனவே வெளியே உள்ள எல்லோரும் கவினை தப்பா நினைத்தார்கள். அப்படிப்பட்ட தோற்றத்தை மாற்ற வேண்டும் என்பதற்காக தான் அவனை அடித்தேன் என்று பிரதீப் ஆண்டனி கூறினார். 


இந்த நிலையில் இது குறித்து தற்பொழுது கவின் விளக்கம் கொடுத்திருக்கின்றார். அதாவது என்னுடைய நண்பர்களுக்கு காமேரா முன்னாடி எப்படி இருக்கனும் என்று தெரியாது. அவர்கள் இயல்பாகவே இருப்பார்கள். பிரதீப் என்னை அறையப்போவதாக சொல்லி தான் அறைந்தார். என்னுடைய நண்பர்கள் எனக்கு செய்வது நல்லதுக்கு என்று நினைத்தேன். அதே போல பிக்பாஸை விட்டு வெளியில் வந்ததற்கு பிறகு எனக்கு நல்லது தான் நடந்திருக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement