• Oct 30 2024

மகளுக்காக ஷுட்டிங் ஸ்பாட்டில் திவ்யா ஸ்ரீதர் செய்த காரியம்- வைரலாகும் உருக்கமான வீடியோ

stella / 11 months ago

Advertisement

Listen News!


செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருந்த நேரத்தில் இருந்தே அவரது கணவர் நடிகர் அர்ணவ் உடன் பிரச்சனை இருந்து வருகிறது. திவ்யாவை அர்ணவ் தாக்கியதாக சர்ச்சை வந்த நிலையில் அவரது புகார்ன் அடிப்படையில் போலீசார் அர்ணவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 அதன்பின் ஜாமீனில் அவர் வெளியில் வந்தார்.பிறகு திவ்யாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு பிறகும் இரண்டு பேருக்கும் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இருவரும் மாறி மாறி புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திவ்யா ஸ்ரீதர் ஷுட்டிங் செல்லும் போது கைக்குழந்தை உடன் தான் செல்கிறார். ஆதரவுக்கு யாரும் இல்லை என்பதால் அவரே ஷூட்டிங் கூட்டி சென்று மகளை பார்த்துக் கொள்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது ஷுட்டிங் ஸ்பாட்டில் மகளுக்கு உணவு தயார் பண்ணி ஊட்டிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement