• Apr 14 2026

“துரந்தர்” திரைப்படத்திற்கு தடைவிதித்த மத்திய கிழக்கு நாடுகள்.! நடந்தது என்ன.?

shali / 4 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகிய “துரந்தர்” படம், வலதுசாரி சிந்தனை கொண்ட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 


இந்த படத்தின் கதைக்களம், பாகிஸ்தானுக்கு எதிரான பின்னணியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதால், சில மத்திய கிழக்கு நாடுகள் இப்படத்திற்கு தடை விதித்துள்ளன.

சமீபத்தில் வெளியான தகவலின் படி, பஹ்ரைன், குவைத், ஓமன், சவுதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 6 நாடுகளில் இப்படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய காரணம், பாகிஸ்தானுக்கு எதிரான கதைக் களத்தை கொண்டிருப்பதால் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம், வெளியான நாளிலிருந்து நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன், ரன்வீர் சிங்கின் நடிப்பு, சாரா அர்ஜுனின் கவர்ச்சி மற்றும் இயக்குநர் ஆதித்யா தர் இயக்கம் என்பன பாராட்டப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்பொழுது வெளியான தகவல் ரசிகர்களுக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Advertisement