• Dec 03 2024

இது வெறும் பொம்மைக் கல்யாணம்.. நெப்போலியன் என்னத்த சாதித்தார்? விளாசிய பிரபலம்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

நெப்போலியனின் மூத்த மகனான தனுஷ் மற்றும் மருமகள் அக்சயாவின் திருமணம் பற்றிய பேச்சுகள் தான் சோசியல் மீடியாவில் வைரலாக உள்ளது. தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனுஷுக்கு உலகமே வியக்கும் அளவுக்கு திருமணம் செய்து வைத்தார் அவருடைய தந்தை நெப்போலியன்.

எனினும் தனுஷால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாது. ஒரு பெண்ணின் வாழ்க்கையை நெப்போலியன் தெரிந்தே கெடுத்துவிட்டார். அதேபோல அக்ஷயாவும் பணத்துக்காக தான் தனுஷை திருமணம் செய்து கொண்டார் என்று பல விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில், பிரபல அரசியல் விமர்சகர் மற்றும் சமூக ஆர்வலர் கிருஷ்ணவேல் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் கூறுகையில், இந்த திருமணத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஒரு திருமணம் எதற்காக செய்து வைக்கப்படுகிறது என்றால் ஆணும் பெண்ணும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தான். சிலர் உடல் தேவை மட்டும் தான் வாழ்க்கையா? இரு மனம் இணைந்தால் போதாதா என்று கேட்கின்றார்கள். இது சினிமாவுக்கு மட்டும்தான் சாத்தியம். நிஜ வாழ்க்கையில் சாத்தியம் கிடையாது.

d_i_a

எழுந்து நடக்க முடியாத மாற்றுத்திறனாளியா இருக்கும் அவருக்கு ஒரு நர்ஸ் தான் தேவையே தவிர மனைவி இல்லை. பெரிய ஐடி நிறுவனத்தை நடத்தும் நெப்போலியனால் இதை ஏன் ஏற்க முடியவில்லை. எதற்கு இந்த பொம்மை கல்யாணம்? இந்த கல்யாணத்தால் யாருக்கு என்ன பயன்? அந்தப் பெண்ணின் வாழ்க்கையை சீரழிப்பது எந்த வகையில் நியாயம்?


முதலில் அந்தப் பெண் முழு மனதுடன் சம்மதித்தாரா இல்லை நிர்ப்பந்திக்கப் பட்டாரா இல்லையென்றால் ஏதும் இக்கட்டான சூழ்நிலையை தான் இந்த திருமணத்திற்கு சம்பந்தித்தாரா என்பதை பார்க்க வேண்டும். அந்த பெண்ணால் மனம் விட்டு கூட பேச முடியாது அப்படி இருக்க ஏன் இந்த திருமணம் இதில் எதை சாதித்தார் நெப்போலியன்.

அந்தப் பெண்ணுக்கு பல கோடி ரூபாய் சொத்து எழுதி வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த சொத்தை வைத்து அவரால் என்ன செய்ய முடியும். இந்த கல்யாணத்தை செய்ததற்கு பதிலாக இதுபோன்ற குறைபாடு உள்ளவர்களுக்கு என தமிழ்நாட்டில் ஒரு மையத்தை ஆரம்பித்திருக்கலாம் நெப்போலியன். அல்லது தனுஷ் பெயரில் ஒரு அறக்கட்டளையை ஆரம்பித்திருக்கலாம் இது பல தலைமுறைக்கும் பேசும் என்று குறித்த சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement