• Jan 19 2025

ரம்யா முகத்துல அப்படியொரு பிரகாசம் தெரியுதே..! வெளியான க்யூட் போட்டோ உள்ளே ..!!

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

மொட்டை மாடியில் தனது இடுப்பழகை காட்டி ஒரே நாளில் உலகப் பிரபலமானவர்தான் நடிகை ரம்யா பாண்டியன். இவர் இந்த ஒரு போட்டோ ஷூட் மூலமே மிகப்பெரிய அளவில் வைரலானார். இவரை பார்த்து பலரும் மொட்டை மாடியில் போட்டோ ஷூட் செய்தார்கள். ஆனாலும் அது ரம்யா பாண்டியன் அளவுக்கு இல்லை.

இதைத்தொடர்ந்து தமிழில் வெளியான ஆண் தேவதை, ஜோக்கர், மாலை நேரத்து மயக்கம் போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்கள் அவருக்கு பெரிதாக வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கவில்லை. அதில் ஜோக்கர் திரைப்படம் மட்டும் நல்ல விமர்சனத்தை பெற்றது.

d_i_a

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, பிக் பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். அதன் பின்பு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று வந்தார்.


சமீபத்தில் யோகா மாஸ்டர் ஆன லோபல் தபாலுடன் ரம்யா பாண்டியனுக்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணம்  ரிஷிகேஷ் கங்கை நதிக்கரை ஓரத்தில் உள்ள கோயிலில் எளிமையாக நடைபெற்றுள்ளது. மேலும் இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே பங்கேற்று உள்ளார்கள்.

இந்த நிலையில், ரம்யா பாண்டியன் திருமணத்திற்கு பிறகு தனது காதல் கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை  இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இதை பார்த்த ரசிகர்கள் அவர்களுடைய படத்திற்கு தமது லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றார்கள். 


Advertisement

Advertisement