• Dec 07 2024

ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்! மயங்கி விழுந்த சமந்தா! பதறிய ஹீரோ...

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தா சமீபகாலமாக பெரிய அளவு ஹிட் படங்களில் நடிக்காமல் இருக்கிறார். அதை தாண்டி வெப் தொடர்களில் நடித்து வருகிறார். ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் வருண் தவான், சமந்தா, சிம்ரன் உள்ளிட்டோர் நடித்த Honey Bunny வெப்தொடர் அமேசான் பிரைமில் ரிலீஸாகி ரசிகர்களை கவர்ந்துவிட்டது. 


மயோசிடிஸ் எனும் அரிய வகை நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டே சமந்தா கஷ்டப்பட்டு நடித்தது வீண் போகவில்லை இதில் ஒரு பெண் குழந்தையை சமந்தா வளர்க்கும் விதம் பற்றி பலரும் பாராட்டுகிறார்கள்.  அந்த தொடரில் ஹீரோவாக நடித்த வருண் தவான் நேர்காணல் ஒன்றில் ஷூட்டிங் நேரம் நடந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார்.

d_i_a



சைபீரியாவில் இருக்கும் ரயில் நிலையத்தில் நான் ஓட வேண்டும், சமந்தா என் பின்னால் ஓடி வர வேண்டும். நான் கேமராவை தாண்டி ஓடிவிட்டேன். சமந்தா அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார். அவரை ஓடி வந்து பிடித்து, பேக் அப் செய்யலாம் என இயக்குநர் ராஜிடம் கூறினேன். அவரோ அமைதியாக இருங்க. நீங்க அங்க போய் நில்லுங்க, கவலைப்பட வேண்டாம். சமந்தா சரியாகிவிடுவார் என்றார்.


எனக்கு அப்பொழுது என்ன செய்வது என்றே தெரியவில்லை. சமந்தா ஒரு இன்ஸ்பிரேஷன்.  தனக்கு மயோசிடிஸ் இருப்பது தெரிந்ததும் அதை ராஜ் மற்று டிகேவிடம் சொல்லி வேறு யாரையாவது நடிக்க வைங்க என கெஞ்சியதாக சமந்தா முன்பு தெரிவித்தார். ஆனால் அவரின் கோரிக்கையை ஏற்காமல் ராஜ் மற்றும் டிகே சமந்தாவை நடிக்க வைத்து அவருக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்துவிட்டார்கள். என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement