• Feb 21 2025

படம் என்றால் இப்படித்தான் இருக்கனும்...- விளக்கமளித்த இயக்குநர் பேரரசு!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உள்ள பேரரசு, 'டெக்ஸ்டர்' பட விழாவில் அவரது உணர்ச்சிபூர்வமான பேச்சால் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். திரைப்படங்கள் எப்போது, எந்த நோக்கத்தில்உருவாகின்றன என்பதிலிருந்து, சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அவர் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

பேரரசு, "ஒரு படம் எப்போது உருவாகிறது என்பதிலும், அதன் நோக்கம் என்ன என்பதிலும் கவனம் செலுத்துவது முக்கியம் "என்று கூறினார். அவர் மேலும், "பல படங்கள் வந்தாலும், லப்பர் பந்து, குடும்பஸ்தன் போன்ற படங்களைப் பார்த்தாலும், நினைவில் நிலைத்திருப்பது FIRE படம் தான். அந்த படம் சமூக மாற்றத்தை தூண்டும் வகையில் இருந்தது எனக் கூறினார்.


அத்துடன் அவர், "ஒரு படம் பார்க்கும் போது, அதை எப்போதும் ரசனைக்காக மட்டுமல்ல, அதன் பின்னணியில் உள்ள கருத்துக்களையும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு படம் சமூகத்தில் எந்த விதமான தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்" என தெரிவித்தார்.

அவர் மேலும்  "ஒரு ஹீரோ ஒரு காட்சியில் காதலை வெளிப்படுத்தும் போது ஹீரோ காட்சியில் முத்தம் கொடுக்கிறாரு, அதனால் உங்களுக்கு ஏன் வயிறு எரிய வேண்டும்?" என்றதுடன் அப்படி  முத்தம் கொடுத்து படம் நடித்து வந்தால், நாங்களே ஹீரோ ஆயிடுவோம்! என்ற அவரது உணர்ச்சிபூர்வமான வரிகள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.


இயக்குநர் பேரரசு, தமிழ் சினிமாவில் மாற்றங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் தனது கருத்துக்களில் தெரிவித்தார். "தமிழ் சினிமா தொடர்ந்து வளர வேண்டுமென்றால், புதுமையான கதைகள், வித்தியாசமான கதாபாத்திரங்கள், ஆழமான திரைக்கதைகள் தேவை" எனக் கூறினார்.

இயக்குநர் பேரரசு, 'டெக்ஸ்டர்' பட விழாவில் கூறிய கருத்துகள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. FIRE படம் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள், திரைப்படங்களின் முக்கியத்துவம் ஆகியவை குறித்து ரசிகர்களிடம் புதிய சிந்தனைகளை தூண்டியுள்ளன.

Advertisement

Advertisement