பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட லொஸ்லியா, தற்போது சினிமாவில் கதாநாயகியாக கலக்கி வருகின்றார்.
இதுவரை இடம் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் எட்டு சீசன்களிலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்த சீசன் ஆக மூன்றாவது சீசன் காணப்படுகிறது. அதற்கு காரணம் அந்த சீசனில் சாண்டி மாஸ்டர், கவின், லாஸ்லயா, முகுந்தன் மற்றும் தர்ஷன் ஆகியோரின் நட்புதான்.
இதை தொடர்ந்து கூகுள் குட்டப்பா, பிரண்ட்ஷிப் போன்ற படங்களில் நடித்தார் லொஸ்லியா. ஆனாலும் இந்த படங்கள் தோல்வி படங்களாகவே அமைந்தது. அதன் பின்பு மாடலிங், ஆல்பம் சாங், விளம்பரம் ஆகியவற்றிலும் நடித்து வந்தார்.
இந்த நிலையில், அறிமுக இயக்குனர் யோஸ்வா சேதுராமன் இயக்கத்தில் லொஸ்லியா நடித்துள்ள ‘ஜென்டில்வுமன்’ பட விழாவில் லொஸ்லியா பதட்டத்துடன் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
‘ஜென்டில்வுமன்' திரைப்படம் எதிர்வரும் மார்ச் ஏழாம் தேதி வெளியாக உள்ளது. இதை முன்னிட்டு இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்ற போது லொஸ்லியா உட்பட லெனின் பாரதி, ராஜூ முருகன், த.செ. ஞானவேல் ஆகியோர் கலந்து கொண்டு இருந்தார்கள்.
இதன் போது லொஸ்லியா பேசுகையில், எனக்கு கொஞ்சம் பதட்டமா இருக்கு. இந்த பதட்டத்துல யாருடைய பெயரையும் மிஸ் பண்ணி இருந்தால் தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க. எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை தந்த புரொடக்ஷன் டீமுக்கு முதலில் நன்றி சொல்லுகின்றேன்.
இந்தப் படம் கொஞ்சம் பொலிடிகலா இருக்கும். அதற்கேற்ற மாதிரி விஷுவல் எல்லாம் ரொம்ப அழகா இருக்கும் என்று லொஸ்லியா அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
அத்துடன் லொஸ்லியா பேசிக்கொண்டு இருக்கும்போதே எனக்கு எதுக்குன்னு தெரியல ரொம்ப பதட்டமா இருக்குது என்று சொன்னதோடு மார்ச் 7 படம் ரிலீஸ் ஆகுது நீங்க எல்லாருமே கண்டிப்பா படம் பாக்கணும் என எனது அன்பான கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
Listen News!