அமரன் படத்தின் பிளாக் பாஸ்டர் ஹிட்டுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உயர்ந்துள்ளது. தற்போது தொடர்ச்சியாகவே பல படங்களில் கமிட் ஆகி உள்ளார்.
அதன்படி ஏ. ஆர் முருகதாஸின் இயக்கத்தில் மதராஸி என்ற படத்திலும், சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்திலும் பிஸியாக நடித்து வருகின்றார்.
இதில் பராசக்தி திரைப்படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக காணப்படுகிறது. இதனால் இந்த படம் நிச்சயம் ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கையில் இந்த படத்திற்கு சம்பளம் வாங்காமலேயே படத்தில் லாபத்தில் பங்குக் கேட்டு உள்ளாராம் சிவகார்த்திகேயன்.
இதனால் இந்த படம் ஹிட் அடித்தால் சிவகார்த்திகேயனுக்கு எப்படியும் 100 கோடிக்கு மேல் லாபம் கிடைக்கும் என நம்பப்படுகின்றது. மேலும் தனுஷ், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் சம்பளம் இதுவரையில் 50 கோடியை தாண்டாத நிலையில் சிவகார்த்திகேயன் சம்பள விஷயத்தில் அவர்களை மிஞ்சி இருப்பது தற்போது பேசு பொருளாக காணப்படுகிறது.
இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் 23 வது படமான மதராஸி திரைப்படத்திற்கும் பழைய படத்தின் டைட்டில் தான் வைக்கப்பட்டுள்ளதாக வலைப்பேச்சு டீமில் உள்ளவர்கள் கலாய்த்து தள்ளி உள்ளனர்.
அந்த வகையில் சிவ கார்த்திகேயன் நடிப்பில் ஏற்கனவே வெளியான அமரன், காக்கிச்சட்டை, மாவீரன், பராசக்தி போன்ற படங்களோடு இந்தப் படமும் பழைய படத்தின் டைட்டில் தான் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதில் என்ன சென்டிமென்ட் இருக்குது என்று தங்களுக்கு தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
Listen News!