• Sep 28 2025

இது தவறான முன்னுதாரணம்! விஜயை கடுமையாக கண்டித்த பிரேமலதா விஜயகாந்த்

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

கரூரில் தமிழக வெற்றி கழகத் தலைவர் நடிகர் விஜய் தலைமையில் இடம் பெற்ற பொதுக்கூட்டத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.  இந்த சம்பவம் தொடர்பில் தற்போது பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

கரூரில்  விஜய் 12 மணிக்கு வர வேண்டியவர். ஆனால் இரவு 8 மணிக்கு வந்தடைந்தார். விஜயை பார்க்க காலை முதல் கூட்டம் கூடி இருந்தது.  100 அடி குறுகலான சாலையில் 60 அடி விஜயின் பேருந்து நின்றதால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஒவ்வொருவராக மயங்கி விழுந்தனர். அவர்களால் வெளியேற முடியவில்லை. 

அந்த நேரத்தில் குழந்தைகளை காணவில்லை என  தெரிவித்து ஒரு கூட்டம் சிதறி ஓடியது. அதிலும் உயிரிழப்பு ஏற்பட்டது.  ஆக மொத்தத்தில் பெண்கள்,  ஆண்கள், குழந்தைகள் என்று மொத்தமாக 39 பேர் உயிரிழந்து விட்டனர்.  80 பேருக்கு  சிகிச்சை அளித்து வருவதாக  கூறப்பட்டது. 


இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு  தலா 10 லட்சம் தருவதாக  அரசு அறிவித்துள்ளது. அத்துடன் விஜயும் இதற்கு பொறுப்பு கூற வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும் என  பிரபலங்கள் பலரும் கூறி வருகின்றனர்.  இன்னொரு பக்கம் விஜயை கைது செய்ய வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். 

இந்த நிலையில்,  கேப்டன் விஜயகாந்த் உடன் பயணிக்கும் போது பெரிய பெரிய கூட்டத்தை பார்த்திருக்கின்றோம். 90 ஆம் ஆண்டுகளில் என் திருமணம் முடிந்த பிறகு பெரிய கூட்டத்தோடு தான் சென்றோம். ஆனால் இந்தச் சம்பவம் ஒரு தவறான முன்னுதாரணம். இனி இது போல் நடக்கக்கூடாது என  கரூர் சம்பவம் பற்றி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி கொடுத்துள்ளார்.




Advertisement

Advertisement