விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியல் ஆரம்பித்த குறுகிய காலத்திற்குள்ளே தனக்கென மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டது.
இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய கதை களம் வெளியாகி உள்ளது. அதன்படி குறித்த ப்ரோமோவில் என்ன நடக்குது என்பதை விரிவாக பார்ப்போம்.
அதில் ஏற்கனவே மனோஜ், ராணி வாயிலிருந்து எப்படியாவது உண்மையை எடுக்க வேண்டும் என பல முயற்சிகளை பண்ணுகின்றார். இறுதியில் ராணி வீட்டிற்கு சென்று தவறாக நடக்க முற்படுகின்றார்.
இதனால் உஷாரான ராணி அயலில் உள்ளவர்களை அழைத்து மனோஜை வெளுத்து வாங்குகின்றார்.
தற்போது வெளியான ப்ரோமோவில், மனோஜ் ராணியிடம் தப்பாக நடக்க முற்பட்டது பற்றி முத்து அண்ணாமலையிடம் கூறுகிறார்.
எனினும் விஜயா, மனோஜ் தப்பு பண்ணி இருக்க மாட்டான் என்று வாதிடுகிறார். இறுதியில் மனோஜ் ராணி வீட்டிற்கு சென்றதை அங்குள்ளவர்கள் பார்த்துள்ளார்கள்.
எனவே ராணி கழுத்தில் மனோஜ் தாலி கட்ட வேண்டும் என முத்து சொல்லுகிறார். இதை கேட்டு மனோஜ், ரோகிணி, விஜயா பேரதிர்ச்சிக்கு உள்ளாகின்றனர். இது தான் தற்போது வெளியான ப்ரோமோ.
Listen News!