• Oct 29 2025

இது ஆறுதல் கூறும் நிகழ்ச்சி மாதிரி தெரியலையே.! விஜயின் செயலை வச்சு செய்யும் வீடியோ

Aathira / 1 day ago

Advertisement

Listen News!

கரூரில் நடந்த துயர சம்பவத்தில்  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, நேற்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களிடம் மன்னிப்பு கேட்டதுடன் இதனை தன்னால் ஈடு செய்ய முடியாது, ஆனால்  என் வாழ்நாள் முழுவதும்  உங்களுக்கு துணையாக இருப்பேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். 

கரூரில் விஜய் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையின் போது  41 பேர் உயிரிழந்தனர்.  இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு மாதத்திற்கு பிறகு, நேற்று மகாபலிபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினுடன் விஜய் தனி சந்திப்பு நடத்தினார். 

அதில் 37 குடும்பங்கள் இந்த சந்திப்புக்காக வரவழைக்கப்பட்டதாகவும், ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியாக விஜய் சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. 

மேலும்  தனிப்பட்ட முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த விஜய்,  விபத்தில் பலியான குழந்தைகளின் புகைப்படங்களை பார்த்து கண் கலங்கியதோடு,  தன்னை குடும்பத்தில் ஒருவராக கருதுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.  மேலும் கட்டாயம் கரூரிலும் உங்களை வந்து சந்திப்பேன் என்று கூறியுள்ளாராம். 


விஜயின் இந்த செயற்பாட்டிற்கு  சார்பாகவும், எதிராகவும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு குடும்பம் விஜயை சந்திக்க மறுத்து அவருடைய 20 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி அனுப்பியதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. 

இந்த நிலையில், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்கு விஜய் செய்த ஏற்பாடு ஆறுதல் கூறும் நிகழ்ச்சியாக தெரியவில்லை என  நெட்டிசன்கள் ட்ரோல் பண்ணி வருகின்றனர் .

ஏனென்றால்  பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த விஜய் அவர்களுக்கு டீ, காபி கொடுத்து, பொன்னாடை அணிவித்து,  புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.  இதன்போது பாதிக்கப்பட்டவர்களும் தங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளனர். இதை பார்த்த நெட்டிசன்கள்  இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்களை  வச்சி செய்து வருகின்றனர்.


 

 

Advertisement

Advertisement