தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகள், அதிரடி கதாபாத்திரங்கள் என்பன மூலம் ரசிகர்களை ஈர்க்கும் நடிகை க்ரித்தி ஷெட்டி, சமீபத்தில் ஒரு உணர்ச்சி பூர்வமான பேட்டி ஒன்றினை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அவர் தற்பொழுது, ரசிகையாக இருந்த அனுபவங்கள் முதல் தற்போது நடிகையாக மாறிய தனது பயணம் வரை அனைத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். அவரது இந்தக் கருத்துகள் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது.
க்ரித்தி ஷெட்டி அதன்போது, “நான் பையா படத்தை எத்தனை தடவை பார்த்தேன்னு தெரியாது. CD போட்டு நாள் முழுக்க பார்ப்பேன். வாரியர் மற்றும் பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் ஒரே இடத்தில நடந்த போது, நான் கார்த்தி சாரை சந்திக்க முயற்சி செய்தேன். ஆனா, முடியல… இப்போ வா வாத்தியார் படத்துக்குப் பிறகு நான் ரசிகையில இருந்து நடிகையா மாறிட்டேன். இது ரொம்ப கூச்சமா இருக்கு.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த உரை, க்ரித்தி ஷெட்டியின் ரசிகர் மனோபாவத்தையும், திரைப்படத் துறையுடன் சேர்ந்த பயணத்தையும் மிகவும் நேர்மையாக வெளிப்படுத்துகிறது.
தற்பொழுது, க்ரித்தி ‘வா வாத்தியார்’ படத்தின் மூலம், கார்த்தியின் ரசிகராக இருந்து நடிகையாக மாறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன், இவர்களின் நடிப்பில் உருவாகும் ‘வா வாத்தியார்’ படம் 2025 டிசம்பர் 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Listen News!