• Apr 15 2026

பிக் பாஸ் துஷாருக்கு பொண்டாட்டி இருக்கா.? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்த போஸ்ட்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் இரண்டு மாதங்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.  இறுதியாக கடந்த வாரம் பிரஜின் வெளியேறி இருந்தார். அவரை விஜய் சேதுபதி வழி நடத்திய விதம் பார்ப்போருக்கு  ஆச்சரியமாக அமைந்தது.

எனினும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவது நன்றாக இருந்தாலும், அவர் முக்கிய பிரச்சினைகளை விட்டுவிட்டு உப்பு சப்பு இல்லாத பிரச்சனைகளை பேசி விட்டு போவதாகவும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்திருந்தனர். 

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 9-ல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள்  ஒருவரான துஷார் எலிமினேட்டாகி வெளியே சென்றார். தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் 'ஐ லவ் யூ பொண்டாட்டி' என்று  போஸ்ட் ஒன்றை பகிர்ந்து உள்ளார். இது ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது.


ஏற்கனவே பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போது துஷார்கொடுத்த பேட்டியில்,  எனக்கு மிகவும் நெருக்கமான தோழி  அரோரா ]. நான் மனம் உடைந்து இருந்தபோது அரோரா மட்டும்தான் தோள் கொடுத்தார்.  ஆனால் இதனை தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். காதல் என்ற இன்டன்சனோடு நாங்கள் பேசவில்லை என்று அரோராவின் சாப்டருக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தார். 


இவ்வாறான நிலையில் தற்போது துஷார் வெளியிட்ட போஸ்ட்  பல கேள்விகள் எழுவதற்கு காரணமாக அமைந்துள்ளது. அத்துடன் அவருடைய  பதிவிற்கு  பெண் ஒருவர் ஐ லவ் யூ டு என்று ரிப்ளை அனுப்பியுள்ளார் .  அவருடைய இன்ஸ்டா  பக்கத்திலும் ஆல்வேஸ் துஷார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே துஷாருக்கு காதலி உள்ளார் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement