• May 24 2026

இணையத்தில் ட்ரெண்டிங்காகும் அஜித்.! குழந்தைக்காக செய்த காரியம் வைரல்

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

மலேசியாவில் நடைபெறும்  12 மணி நேர கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் போட்டியிட்டு வருகின்றார். அவரை காண்பதற்காக நாளுக்கு நாள் ரசிகர் கூட்டம் திரண்டு வருகின்றது.

கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு  மலேசியாவில் தன்னை பார்க்க வந்த சுமார் 500க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் ஒவ்வொருத்தராக செல்பி எடுத்துக்கொண்டு  தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி உள்ளார் அஜித். இது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய பேசும் பொருளாக மாறியது. அது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரல் ஆகின.


சினிமாவில் மட்டும் இல்லாமல் கார், பைக்  ரேஸிங்கிலும் கலக்கி வருகின்றார் அஜித் குமார். குட் பேட் அக்லி படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுடன்  கூட்டணி அமைத்துள்ளார் அஜித். இந்த படத்தின் படப்பிடிப்புகள்  அடுத்த ஆண்டு  ஜூன் மாதத்திற்கு பிறகு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


செபாங் நகரில் நடைபெற்று வரும் மிச்சலின் 12 மணி நேர ரேஸிங்கில், தனது ரேஸிங் அணியுடன் அஜித் கலந்து கொண்டுள்ளார். அதில் நடத்தப்பட்ட போட்டியில் அஜித்குமார் தலைமையிலான அணி நான்காவது இடத்தை கைப்பற்றியுள்ளது. 


இந்த நிலையில், அஜித்குமாரின் மற்றும் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. அதில்  அஜித்குமார் தனது குட்டி ரசிகனுக்கு அவருடைய டி-ஷர்டில் தனது  கையெழுத்தை பதிக்கின்றார். இதன் போது அவர் சிரித்த முகத்துடன்  குழந்தையை நடத்திய விதம் பார்ப்போரின் மனதை கொள்ளை கொண்டுள்ளது.  தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement