• Apr 01 2025

ஒரே திரையில் ஒட்டுமொத்த இயக்குனர்கள்! பழசை மறக்காத கமல்! வைரலாகும் புகைப்படம்!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கமலஹாசனின் 'பேசும் படம்' உட்பட பல படங்களை இயக்கியவர் சிங்கீதம் சீனிவாசராவ். 93 வயதான சிங்கீதம் சீனிவாசராவ்வை கௌரவிக்கும் பொருட்டு கமலின் ராஜ்கமல் நிறுவனம் சார்பில் 'அபூர்வ சிங்கீதம்' என்ற பெயரில் விழா எடுத்து கௌரவித்துள்ளார் நடிகர் கமல். 


சென்னையில் உள்ள திரையரங்கம் ஒன்றில் சிங்கீதம் இயக்கத்தில் கமல் நடித்த 'ராஜபார்வை', 'பேசும் படம்', 'அபூர்வ சகோதரர்கள்', 'மும்பை எக்ஸ்பிரஸ்' ஆகிய நான்கு படங்கள் தினம் ஒன்றாகத் திரையிடப்பட்டுவருகிறது. இந்த விழாவில் கமல் தயாரிப்பில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. 


நேற்று நடந்த நிகழ்வில் மணிரத்னம், சுஹாசினி, ஒய்.ஜி.மகேந்திரன், சஷிகாந்த், சித்தார்த், அன்பறிவ், வைரமுத்து, ராஜீவ்மேனன் என பலர் கலந்துகொண்டு 'ராஜபார்வை'யைப் பார்த்து ரசித்தனர். விழாவில் பங்கேற்ற ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் சுஹாசினியிடம் இயக்குநர் விழா குறித்துக் கேட்டதற்கு நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.


Advertisement

Advertisement