• Apr 02 2025

ஒரு ஹிட் நடிகை இப்படியா செய்றது? படப்பிடிப்பை விட்டு தெறித்து ஓடிய ஸ்ரேயா!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினி, விஜய், விக்ரம், விஷால், ஜெயம் ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நாயகிகளுக்கு ஜோடியாக நடித்து டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ள இவர் இப்போதும் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். 


அவ்வப்போது நடிகை ஸ்ரேயா தனது மகள் மற்றும் கணவருடன் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட வண்ணம் இருப்பார். அண்மையில் ஒரு பேட்டியில் நடிகை ஸ்ரேயா பேசும்போது, நான் நடிகையாக அறிமுகமான ஆரம்ப நாட்களில் நிறைய பிரச்சனைகளை எதிர்கொண்டேன், ஒருமுறை படப்பிடிப்பை விட்டு ஓடிப்போய் விட்டேன்.


நடிகர் விக்ரம் கந்தசாமி படத்தில் நடித்தபோது ஒரு காட்சிக்காக நிறைய டேக் எடுத்தார்கள், ஆனால் ஹீரோ விக்ரம் பொறுமையாக என்னோடு நடித்தார், அதை எப்போதும் மறக்கவே முடியாது. நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள், சக்சஸ்புல் படங்கள் செய்கிறீர்கள். நாளை இந்த நிலைமை மாறிவிடலாம், தோல்விகளை கூட சந்திக்க வேண்டி வரும், இருந்தாலும் ரசிகர்களோடு மரியாதையாக நடந்து கொள்ளுங்கள் என அறிவுரை சொன்னதாக கூறியுள்ளார்.

Advertisement

Advertisement