தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமான இயக்குநர் லிங்குசாமி, சமீபத்தில் ஒரு பேட்டி மூலம் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து, ரசிகர்களையும், திரையுலகத்தையும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார். அதாவது, அவர் அந்தப் பேட்டியில் அஜித் பற்றிய சில கருத்துகளைக் குறிப்பிட்டுள்ளார். அது தற்பொழுது வைரலாகி வருகின்றது.

லிங்குசாமி அதன்போது, “அஜித் சார் லுக், வாய்ஸ் வைச்சு அப்பவே அவர்கிட்ட ஜி நீங்க MGR போல இருக்கீங்கன்னு சொல்லியிருக்கேன். அவர் என்ன ஜி, பெரிய வார்த்தைல்லாம் சொல்லுறீங்கன்னு சொல்லுவார்.” என அவர் தெரிவித்தார்.
மேலும், "அஜித் சார் சூர்யா, விக்ரம் போல சினிமாலேயே இருக்கிறது இல்ல... அவர் சினிமாவை ஜஸ்ட் தொழிலாத் தான் பார்க்கிறாரு.. இதெல்லாம் சிலருக்குத் தான் அமையும். " எனவும் கூறியிருந்தார்.

இதன்மூலம், லிங்குசாமி, நடிகர் அஜித் ஒரு தனித்துவமான கலைஞராக இருக்கிறார் என்பதை மேலும் உறுதிப்படுத்தியுள்ளார். தற்பொழுது இந்தக் கருத்துகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Listen News!