• Dec 04 2024

வேட்டையன் ஜெயிலரை விட ரொம்ப பெட்டர்.. ஆனா அமிதாப் மட்டும் இல்லனா டோட்டல் வேஸ்ட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் தான் தற்போது பேசுப் பொருளாக காணப்படுகின்றது. இந்த படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகின்றது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தை விட வேட்டையன் படம் பெட்டர் என்று பிரபல பத்திரிகையாளரும் விமர்சகர்மான வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.

அதன்படி அவர் தெரிவிக்கையில், வழக்கமான ரஜினி படங்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் ஈர்க்காது. ஏன்னா அதில் கமர்சியல் ஜாஸ்தியா கொட்டி கிடக்கிறது. ஆனா வேட்டையன் படம் ஜெய்லர் படத்தை விட பெட்டரா இருக்கு. அதுக்கு காரணம் இது வழமையான ரஜினி படமா இல்ல.

இந்த கதையில டிராவல் பண்ண விஷயம் பிடிச்சிருக்கு. நிஜ வாழ்க்கையில ரஜினி என்கவுண்டரை ஆதரிப்பவர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் அந்த கூட்டத்தில் நுழைஞ்சிட்டாங்கன்னு சொன்னாரு. அவரை வைத்து என்கவுண்டர் எதிரான விஷயத்தை இயக்குனர் சொல்லியிருக்கிறார். அது பிடித்திருந்தது. வழக்கமா ஹீரோ சொல்றதும் செய்ததும் தான் சரின்னு சொல்லுவாங்க, காட்டுவாங்க. ஆனா இந்த படத்துல ரஜினி ஒரு விஷயத்தை பண்ணுறாரு ஒரு கட்டத்துல அதை தவறுன்னு உணர்ந்துறாரு. அதுல அதிர்ச்சி என்னன்னா ரஜினி ரசிகர்களுக்கு இந்த படம் பெரிய அளவில் ஈர்ப்பை கொடுக்கவில்லை.


ஜெய்லர் அளவுக்கு இல்லை என்று ரஜினி ரசிகர் சொல்கிறார்கள். சுருட்டுல இருந்து ரஜினியோட முகம் தெரிகிறது தான் அந்த படத்தில் ஆகச்சிறந்த அபத்தமான காட்சி. அதற்கு ரஜினி ரசிகர்கள் பயங்கரமா கிளாப் பண்றதை அறிந்தேன். இது ரஜினி ரசிகர்களுக்காகவே வைக்கப்பட்ட காட்சி.

மேலும் கல்வி வியாபாரமாகிறது, நீட் தேர்வுக்காக நடத்தப்படுகின்ற கோச்சிங் சென்டர் என பல விஷயங்கள் இருக்கு. ஏழைகளின் கல்வி, பணக்காரனுடைய வியாபாரமா ஆகிடுச்சு என்ற டயலாக் ரொம்பவும் பவர்ஃபுல்லா இருக்கு. 

அத்துடன் அமிதா பச்சனை தவிர அந்த கேரக்டரை வேற ஒருத்தர் பண்ணி இருந்தா இந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்குமானு கேட்டா சந்தேகம் தான். ரஜினியோட தப்பையே அவர் சுட்டிக் காட்டுகிறார். அதற்கு அந்த கேரக்டர் ரொம்ப சரியா இருக்கு. அவர் இல்லாமல் வேறு ஒருவர் நடித்திருந்தால் இந்த படம் ஒரு கசப்பான அனுபவமா இருக்கும் என அவர் தெரிவித்து உள்ளார்.

Advertisement

Advertisement