விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களின் வரவேற்பை பெற்று ஆறாவது சீசன் வரை முன்னேறியுள்ளது. கடந்த இரண்டு சீசன்களாக பல மாற்றங்களைக் குக் வித் கோமாளி சந்தித்திருந்தாலும் அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் தனி வரவேற்பை கொடுத்து வருகின்றார்கள்.
குக் வித் கோமாளி சீசன் 6ல் இறுதியாக உமைர் எலிமினேட் ஆகி வெளியேறி இருந்தார். இது அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அங்கிருந்த போட்டியாளர்கள் கூட உமைர் எலிமினேட் ஆகி வெளியே போவதை எண்ணி அழுதிருந்தனர்.
இதைத்தொடர்ந்து டிக்கெட் டு பினாலே சுற்று நடைபெற்றது. இதில் ஷபானா, பிரியா ராமன், லட்சுமி ராதாகிருஷ்ணன், மற்றும் ராஜி, நந்தகுமார் என ஐந்து போட்டியாளர்களுக்கும் இடையே கடுமையான போட்டி நடைபெற்றது.
இந்த ஐவரில் நன்றாக சமைத்து நடுவர்களிடம் நல்ல மதிப்பெண்களைப் பெற்ற ஷபானா டிக்கெட் டு பினாலே சுற்றில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவர் குக் வித் கோமாளி சீசன் 6ன் முதல் பைனலிஸ்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது ரசிகர்கள் பலரும் ஷபானாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள்.
இதை வேளை நடிகை ஷபானா ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!