• Oct 26 2025

நானியின் புதிய அவதாரம்.. "தி பாரடைஸ்" படத்தின் அசத்தலான லுக் வைரல்.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நானி, தொடர்ந்து தரமான கதைகளைத்  தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகராவார். அவரது அடுத்த திரைப்படமான ‘தி பாரடைஸ்’ பற்றிய அப்டேட்களை எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்களுக்கு இப்போது ஒரு சிறந்த surprise வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் அந்தப் படத்திலிருந்து நானியின் புதிய லுக் தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.


இந்த லுக்கில், நானி ஜிம் சென்று உடல் வடிவத்தை மிகவும் மேம்படுத்தி, ஒரு அழகிய கட்டமைப்பான தோற்றத்தில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்ளும் விதத்தில் காட்சியளித்துள்ளார். இந்த லுக் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

‘நேச்சுரல் ஸ்டார்’ என அழைக்கப்படும் நானி, இதற்கு முன்பு பல்வேறு கதாபாத்திரங்களில் தனது வித்தியாசமான நடிப்பைக் கொண்டு ரசிகர்களின் நெஞ்சங்களை வென்று வந்தவர். ஆனால் இப்போது, அவருடைய உடலியல் தோற்றத்திலேயே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, ரசிகர்களையும் திரையுலகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.


இந்த லுக் வெளியாகி சில மணி நேரங்களுக்குள் #NaniLookFromTheParadise என்ற ஹாஸ்டாக் டுவிட்டரில் ட்ரெண்டாக ஆரம்பித்து விட்டது. ரசிகர்கள் அவரின் புதிய தோற்றத்தை பாராட்டி பல விதமான கமெண்ட்ஸினைப் பகிர்ந்து வருகின்றனர். 

Advertisement

Advertisement