ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் தான் மதராஸி. இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரித்துள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார். இவர்களுடன் வித்யூத் ஜமால், மலையாள நடிகர் பிஜு மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற பிற மொழிகளிலும் இந்த படம் பெரிய அளவில் ஆரவாரம் இன்றி வெளியானது. தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக திகழும் விஜய் சினிமாவை விட்டு விலக உள்ளதால் அடுத்த தளபதி ரேஞ்சுக்கு சிவகார்த்திகேயன் கொண்டாடப்பட்டு வருகின்றார். எனினும் ரஜினி, கமல், விஜய் போன்ற டாப் நடிகர்களின் படங்களுக்கு அடுத்தபடியாக அதிக வசூல் ஈட்டிய ஹீரோ என்றாலும் அது சிவகார்த்திகேயன் தான்.
அமரன் படத்தின் வெற்றிக்கு பின்பு மதராஸி ரிலீஸ் ஆனதால் இந்த படத்தின் பிசினஸும் பெரிய அளவில் காணப்பட்டது. ஆனால் இந்த படம் அமரன் ரேஞ்சுக்கு வசூலிக்குமா என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனினும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருவதால் நாளுக்கு நாள் இதன் வசூல் அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது.
மதராஸி படத்தின் முதல் நாள் வசூல் தமிழ்நாட்டில் மட்டும் 12.8 கோடி என அதிகாரப்பூர்வமான தகவல் வெளியானது. இதன் மூலம் சிவகார்த்திகேயனின் சினிமா கேரியரில் முதல் நாளிலேயே அதிக வசூல் அள்ளிய படங்களின் பட்டியலில் மதராஸி திரைப்படம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த நிலையில், மதராஸி படத்தின் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் மதராஸி படம் வெற்றி பெற வேண்டும் என்று மொட்டை அடித்துள்ளார். தற்போது அவருடைய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.
Listen News!