• Feb 24 2025

'ராயன்' படத்தில் SJ சூர்யா நடிப்பதை சிறப்பு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது படக்குழு!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான கேப்டன் மில்லர் ஓரளவு தான் வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து, தனுஷின் 50-வது படத்தை அவரே இயக்க, இப்படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்து இருக்கிறது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து அபர்ணா பால முரளி, நித்யா மேனன், அனிகா சுரேந்திரன், சந்திப் கிஷன், எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், விஷ்ணு விஷால், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 


D50 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிய நிலையில்,  தனுஷின்  கெட்டப்பை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 

‘ராயன்’ என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் முறுக்கிக்கொண்டு நிற்கும் தனுஷ் மற்றும், அவருக்குப் பின்னால், சந்தீப் கிஷணும், காளிதாஸ் ஜெயராமும் கையில் கத்தியுடன் எட்டிப் பார்க்கின்றனர். 

 இந்த நிலையில், 'ராயன்’ படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ்.  


Advertisement

Advertisement