• Feb 24 2025

நாய்க்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட குரல் கொடுத்தவர்களுக்கு கிடையாதா? த்ரிஷா மீது கடும் அதிருப்தி..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை த்ரிஷா, நாய் உட்பட சில விலங்குகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கூட தனக்காக குரல் கொடுத்தவர்களுக்கு கொடுக்கவில்லை என திரை உலகினர் அதிருப்தி தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நடிகை த்ரிஷா குறித்து அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜு என்பவர் சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய நிலையில் இந்த விஷயம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது என்பதை பார்த்தோம். 

இது குறித்து ஏவி ராஜு மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக த்ரிஷா கூறினாலும் அதற்கு முன்பே சேரன் உள்பட சில திரையுலக பிரபலங்கள் த்ரிஷாவுக்காக குரல் கொடுத்தனர் என்பதும் அது மட்டும் இன்றி நடிகர் சங்கம், பெப்சி யூனியன் உள்பட பல அமைப்புகளும் த்ரிஷாவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



விஷால் உள்பட பல நடிகர்கள் தனிப்பட்ட முறையில் தங்கள் சமூக வலைதளங்களில் த்ரிஷாவை சர்ச்சைக்குரிய பேசிய நபரை கண்டித்தனர் என்பதும் ஒட்டுமொத்த திரையுல உலகமும் த்ரிஷாவுக்கு ஆதரவாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் ஏவி ராஜு மன்னிப்பு கேட்டதால் கிட்டத்தட்ட இந்த விவகாரம் முடிவடைந்ததாக கூறப்படும் நிலையில் தனக்காக குரல் கொடுத்த திரையுலகினர்களுக்கு ஒரு நன்றி கூட த்ரிஷா தெரிவிக்கவில்லை என்று திரையுலகினர் புலம்பி வருகின்றனர். நாய்க்கு ஏதாவது என்றால் உடனே குரல் கொடுக்கும் த்ரிஷா, அவருக்காக குரல் கொடுத்தவர்களுக்கு குறைந்த பட்சம் ஒரு நன்றி தெரிவித்திருக்கலாம் என்றும் அந்த நாகரீகம் கூட த்ரிஷாவிடம் இல்லை என்றும் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement