• Jan 19 2025

முத்துவை ரவுண்டு கட்டிய வீட்டார்கள்.. விஜயாவை மடக்கிய அண்ணாமலை!

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், மனோஜ் கடையில் ஏசியை திருப்பிக் கொடுத்த சுதாவுக்கு ரோகிணி பணத்தை திருப்பிக் கொடுக்கிறார். அதற்கு சுதா ஏசியை திருப்பி அனுப்பாமல் இருந்து இருந்தால் இந்த பிரச்சனை நடந்திருக்காது என்று முத்து பற்றி நன்றாக ஏற்றிவிட்டு செல்கிறார்.

அதன் பிறகு அவர் தானே வேண்டாம் என்று சொன்னாங்க எதற்கு பணம் கொடுத்த என்று மனோஜ் கேட்க, அப்புறம் எனக்கு எப்படி மரியாதை இருக்கும். ஸ்ருதி எப்படி என்னை மதிப்பா? என்று சொல்லுகிறார். மேலும் பணம் எப்படி வந்தது என்று கேட்க, தாலியை அடகு வச்சன் என்று மஞ்சள் கயிறைக் காட்ட மனோஜ் ஷாக் ஆகிறார். எனக்காக இப்படி எல்லாம் பண்ணுற என்று கேட்க, நான் உன்னோட வைப். உன்ன தலை குனிய விட மாட்டேன் என்று சொல்கிறார்.

இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த மனோஜ் ரோகினியும் நடந்த விஷயங்களை எல்லாம் சொல்லி முத்துவை ரவுண்டு  கட்டுகின்றனர். மேலும் ரோகிணி தாலியை அடகு வச்சு தான் அந்த பணத்தை கொடுத்த என்று சொல்ல, இந்த வீட்டு மருமக மஞ்சள் கயித்தோடு நிற்கிறதா? என்று விஜயா கவலைப்படுகிறார். அதற்கு முத்து மீனாவும் ரொம்ப நாளா மஞ்சள் கயிறோட தான் இருந்தா என்று பதிலடி கொடுக்கிறார்.

ஸ்ருதியும் எங்க அம்மா எனக்கும் போன் பண்ணி வருத்தப்பட்டாங்க முத்து அப்படி செய்திருக்கக் கூடாது. வீட்டுல யார் கிட்டையும் சொல்லி இருக்கலாம் என்று பேச, மனோஜ் எனக்கு வர கோபத்துக்கு என்று முத்துவுடன் சண்டைக்கு போகிறார். இதன் போது அண்ணாமலை வந்து நிறுத்துங்கடா இங்க நான் ஒருத்தன் இருக்கிறேன் என்று, நீ பண்ணினது தப்புதான். கூட்டு குடும்பமாக இருக்கிற இடத்தில் தன்னிச்சையா முடிவெடுக்க கூடாது என்று முத்துவுக்கு திட்டுகிறார்.


கிச்சனில் மீனா இருக்க முத்து அங்கே சென்றபோது, மீனாவும்  நீங்க பண்ணின தப்பு தான் என்று சொல்ல, நான் என்ன தப்பு செய்தேன். நீயும் அப்படி சொல்றா என்று கேட்க, அவங்க என்ன திட்டம் போட்டு ஏத்தி அனுப்பினார்களோ அதை நிறைவேற்றி வச்சிருக்கீங்க. இதுவே நீங்க மாமா கிட்ட சொல்லி இருந்தா இதை அவர் டீல் பண்ணி இருப்பார். இப்படி பிரச்சினை வந்திருக்காது என்று சொல்ல, நீ சொன்னதும் சரி தான். எதோ கோபத்தில் தான் பண்ணிட்டேன் என்று சொல்ல, நம்ம கால வாரி விட நிறைய பேர் இருக்காங்க இனி என்ன என்டாலும் நல்லா ஜோசிச்சு பண்ணுங்க என அறிவுரை சொல்லுகிறார்.

அதன்பின்பு ஸ்ருதி ரவியிடம் முத்து செய்தது தப்பு இல்ல என்று  சொல்லப் போறியா என்று கேட்க, ரவியும் முத்துப் செய்தது தப்புதான் என்று சொல்ல, நீயா இப்படி சொல்லுற என ஆச்சரியப்படுகிறார் ஸ்ருதி. ஆனாலும் உங்க அம்மா பண்ணினது தப்புதான். யார்ட்டையும் கேட்காம ஏன் இப்படி ஏசிய அனுப்பினாங்க என்று சொல்லுகிறார். அதுவும் சரிதான் எங்க அம்மா செய்ததும்  தப்புதான் என்று ஒத்துக் கொள்கிறார் ஸ்ருதி. இதனால் அவர்களுக்குள் காதல் வளர்கிறது.

இறுதியாக விஜயா மீண்டும், மீனாவும் முத்துவும் இந்த வீட்டில் இருக்க வரைக்கும் பிரச்சினையா தான் இருக்கும். அவங்களை தனியா வைக்கணும் என்று பேச, அண்ணாமலை கோபப்படுகிறார். அத்துடன் இந்த வீட்டு மருமக மஞ்சள் கயிறு கட்டி இருக்கா, ரோகிணிக்கு தாலி செயின் வாங்கணும் என்று சொல்ல, அது அவ புருஷனோட பிரச்சினை அவன் வாங்கி கொடுப்பான் என்று சொல்ல, அதுவரைக்கும் இந்த வீட்டு மருமகள் இப்படி இருப்பாளா நமக்குத்தானே அனுமானம் என்று விஜயா  சொல்கிறார். அதற்கு அண்ணாமலை மீனா இத்தன நாளா மஞ்ச கயிறு தான் கட்டி இருந்தா அப்போ உன் கௌரவம் என்ன ஆச்சு என்ன கேள்வி கேட்டு விஜயாவை மடக்குகிறார். தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement