• Feb 04 2025

மதகதராஜா படத்திற்கு இவ்வளவு வரவேற்பா? இயக்குநர்கள் ஷாக்கில்!

subiththira / 4 hours ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவரே விஷால். இவர் தனது நடிப்பால் அதிகளவு ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடித்த படங்கள் எல்லாம் அதிகளவு வெற்றியை அளித்துக் கொடுத்தது.

அந்தவகையில் இவரது நடிப்பில் வெளியான தோரணை , தாமிரபரணி , திமிரு மற்றும் பாண்டிய நாடு போன்ற படங்கள் விஷாலுக்கு அமோக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இவ்வாறு தனது நடிப்பால் அதிகளவான படங்களை நடித்து முன்னணியில் திகழ்கின்ற நடிகர்களில் ஒருவராக விஷாலும் உள்ளார்.



அதேவேளை இவரது நடிப்பில் உருவாகி 12 வருடங்களாக திரைக்கு வெளிவராமல் இருந்த படமே மதகதராஜா. இந்தப் படம் சமீபத்தில் வெளியாகி இருந்ததுடன் அதனை பார்ப்பதற்கு அதிகளவான ரசிகர்கள் திரையரங்கிற்கு சென்றிருந்தனர்.

இந்த திரைப்படம் நிறைய நாட்கள் கழித்து வந்திருந்தாலும் அதிகளவு வசூலைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தை தயாரிக்கும் போது 15 கோடியே முடிந்திருந்தது. ஆனால் படம் வெளியாகி 22 நாட்களில் 46 கோடி வசூலை பெற்றுக் கொடுத்ததை எண்ணி படக்குழு மகிழ்ச்சி அடைகின்றனர்.


Advertisement

Advertisement