• Feb 04 2025

நான் நடிகையாவேன் என எதிர்பார்க்கல.. என்ன இப்படி தான் செலக்ட் பண்ணாங்க..!- நடிகை அனஸ்வரா

subiththira / 3 hours ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் நடித்து புகழ் பெற்றவரே நடிகை அனஸ்வரா ராஜன். இவர் க்ளோப்  என்ற குறும்படம் மூலம் அறிமுகமாகி பின் திரைக்கு நடிக்க வந்தார். மேலும் இவர் எவிடே , மை சாண்டா மற்றும் ராங்கி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நேர்காணல் ஒன்றில் அனஸ்வரா கதைத்த வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. அதில் அவர் கூறுகையில் , " நான் நடிகையாக வருவேன் என சற்றும் எதிர் பார்க்கவில்லை என்றதுடன் நான் எங்கட ஊரில இருந்த நடிப்புக் குழுவில் இருந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் எனக்கு நடிக்க தெரியும் என்பதை அறிந்த எனது குடும்பத்தவர்கள் என்னை ஆடிசன் ஒன்றில் கலந்து கொள்ளுமாறு கூறினார்கள். அந்த ஆடிஷனில் கலந்து கொண்ட போது அங்கு  5000 பேர் வந்திருந்தார்கள். அதில் நான் select ஆவன் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

அத்தனை பேரில் என்னை select பண்ணது ரொம்ப பெரிய விஷயம் என்று மிகவும் நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார் அனஸ்வரா. இவ்வாறு select ஆகி இருந்தாலும் தற்பொழுது அதிகளவு படங்களில் நடித்து வருகின்றமை  குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement