• Jan 18 2025

"கோட்" படத்தின் கதையின் சாரத்தை பகிர்ந்திருக்கும் இயக்குனர் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கதில் உருவாகியுள்ள 'கோட்' படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாக காத்திருக்கும் 'கோட்' திரைப்படம் வருகிற செப்டம்பர் 5இல் உலக அளவில் வெளியாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

release film on EPIQ | Tamil Movie ...

யுவன் இசையில் வெளியாகியிருக்கும் 'கோட்' படத்தின் பாடல்கள் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் யூடியூப் வலைதளத்தில் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை தாண்டி வருகிறது.இப்படியிருக்க விகடன் இந்த வார இதழ் 'கோட்' சிறப்பு இதழாக வெளிவந்துள்ளது.குறித்த கட்டுரையில் 'கோட்' படத்தின் கதையின் சாரத்தை பகிர்ந்திருக்கும் இயக்குனர் வெங்கட் பிரபு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார்.

GOAT: Satellite rights for Thalapathy ...

படத்தின் கதை பற்றி குறிப்பிட்டிருக்கும் வெங்கட் பிரபு "The G.O.A.T கற்பனைக் கதைதான். ஆனா, நிஜத்திற்கு நெருக்கமா பண்ண முயற்சி பண்ணியிருக்கோம். SATS- . SPECIAL ANTI TERRORIST SQUAD- சொல்லுவாங்க. RAW அமைப்போட இணைஞ்சு வேலை செய்கிற குரூப் இது. அதில் ஒரு சமயத்துல சிறப்பாக வேலை செய்தவங்க சிலர்... அவங்க ஒரு காலத்தில் பண்ண விஷயம், இப்போ ஒரு பிரச்னையாக வந்து அவங்க முன்னாடி நிக்குது. அதை அவங்க எப்படி எதிர்கொண்டு ஜெயிக்கிறாங்கங்கறதுதான் படத்தோட மையக்கரு." என கதையின் சாரத்தை சொல்லியுள்ளார்.


Advertisement

Advertisement