• Jan 18 2025

சகுனி வேலை செய்த இனியா... சைட் கேப்பில் உறவாடும் கோபி... இனி எழில் எடுக்கும் முடிவு என்ன?

subiththira / 5 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி தொடரில் அடுத்து என நடக்க போகிறது என்ற எதிர் பார்ப்பு ரசிகர்கள் இடத்தில் எப்போதும் உள்ளது. இந்நிலையில் அது தொடர்பான இன்னும் ஒரு அப்டேட் கிடைத்துள்ளது. ஈஸ்வரிடமிருந்து எழில் மற்றும் அமிர்தா தப்பித்து போய் தனியாக வாழ்ந்தால் தான் நிம்மதியாக இருப்பார்கள் என்ற எண்ணத்தில் தான் பாக்கியா எழிலை வெளியே போகுமாறு கூறியிருப்பார். 


கடைசியில் எழிலும், இனிமேலும் இங்கே இருக்க வேண்டாம் என்று அமிர்தா மற்றும் நிலாவை கூட்டிட்டு வெளியேறுகிறார். யார் தடுத்தாலும் கேட்காத எழில் எங்கே போவது என்று தெரியாமல் ஒரு ஹோட்டலில் தங்குகிறார். வழக்கம் போல் இனியா கோபிக்கு போன் பண்ணி, எழில் அண்ணா வீட்டை விட்டு போய்விட்டார். அம்மா தான் அவர்களை வெளியே அனுப்பினார்கள் என்று அரைகுறையாக சொல்லி கொளுத்தி போடும் விடுகிறாள். 


கேட்க யாரும் இல்லாததால் இஷ்டத்துக்கு பண்ணுகிறாரா என்று திட்டிவிட்டு எழிலுக்கு கோபி போன் பண்ணி பார்க்கிறார். எழில் போன் எடுக்காததால் அமிர்தாவுக்கு போன் பண்ணுகிறார். அப்பொழுது கோபி ஆறுதலாக பேசிவிட்டு நீங்க எங்க இருக்கீங்க என்று கேட்கிறார். அதற்கு எழில் இருக்கும் இடத்தை சொல்ல வேண்டாம் என்று சைகை மூலமாக சொல்லுகிறார்.


ஆனாலும் கோபி எப்படியோ அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டு ஹோட்டலுக்கு வந்து விடுகிறார். வந்ததும் அவர்களுக்கு ஆறுதலாக பேசி நிலாவுடன் பாசத்தை காட்டுகிறார். கோபி, ராதிகாவுடன் இருக்கும் வீட்டிற்கு எழில் அமிர்தாவை கூப்பிடுகிறார். சும்மாவே எழிலுக்கு கோபியை பிடிக்காது, இதுல அவமானப்பட்டு வந்து நிற்கும் பொழுது கூப்பிட்டா போயிடக்கூடிய ஆளா எழில்.

அந்த வகையில் நிச்சயம் கோபி கூட போக மாட்டார். இருந்தாலும் தற்போது இருக்கும் இடம் வேண்டும் என்பதால் வாடகை வீட்டில் தங்கி இருந்து அவருடைய கனவு லட்சியத்தை ஜெயித்து காட்டும் விதமாக இனி வரும் காலங்களில் கதை நகரும். 

Advertisement

Advertisement