• Jan 19 2025

தன்னை பற்றிய அவதூறு செய்தி.. யுவன் கேட்ட இழப்பீடு எத்தனை கோடி தெரியுமா?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

இசைஞானி இளையராஜாவின் வாரிசான யுவன் சங்கர் ராஜா 20 லட்சம் ரூபாய் வாடகை தராமல் மோசடி செய்து விட்டதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வீட்டின் உரிமையாளர் புகார் அளித்திருந்தார்.

அதாவது சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் ஜமீலா என்பவருக்கு சொந்தமான வீட்டில் யுவன் சங்கர் ராஜா வாடகைக்கு குடி இருந்துள்ளார். ஜமீலா துபாயில் குடும்பத்தோடு செட்டில் ஆகிவிட்ட நிலையில், அவரின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகின்றது.

அதில் வீட்டின் மாத வாடகை ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் எனவும் அட்வான்ஸ் 12 லட்சம் எனவும் அக்ரிமெண்ட் போடப்பட்டுள்ளது. அதன் பின்பு அந்த வீட்டின் மாத வாடகை ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை சுமார் 18 லட்சம் ரூபாய் வாடகை தராமல் இருந்துள்ளாராம்  யுவன் சங்கர் ராஜா. இதைத் தொடர்ந்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதனால் 12 இலட்சத்தை காசோலையாக அனுப்பி உள்ளார்.


அதன் பின்பு ஓராண்டு காலம் வீட்டில் இருந்ததற்கான வாடகை பணத்தை தரவில்லை என்றும் வீட்டு உரிமையாளர் என்ற முறையில் வீட்டை காலி செய்யும் போது தங்களுக்கு எந்த தகவலும் கொடுக்காமல் காலி செய்து வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் யுவன் சங்கர் ராஜாவை போனில் தொடர்பு கொண்டு பேசினாலும் அதற்கு சரியான பதில் அளிக்கவில்லை என்றும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வாடகை மற்றும் சேதத்திற்கான இழப்பீட்டை பெற்று தர வேண்டும் என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தன்னை பற்றி அவதூறு செய்தி பரப்பியதாக வீட்டில் உரிமையாளர் மீது யுவன் சங்கர் ராஜா வக்கீல் நோட்டிஸ்  அனுப்பியுள்ளார்.

மேலும் பல ஆண்டுகளாக இசை அமைப்பாளராக அறியப்படும் தன்மை பற்றி அவதூறாக தொலைக்காட்சி மற்றும் யூடியூப் சேனல்களில் வீட்டின் உரிமையாளர் அளித்துள்ள பேட்டி தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளதால் தனக்கு 5 கோடி ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement