• Jan 19 2025

GOAT FDFSயில் ஜோராக திருமணம் செய்த ஜோடி.. படம் பார்க்க வந்த அனிமல்ஸ்..! வைரலாகும் அலப்பறைகள்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

இளைய தளபதி விஜய் நடித்த கோட் திரைப்படம் இன்றைய தினம் திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு தளபதி ரசிகர்கள் நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்து வருகின்றார்கள். 

அதுமட்டுமின்றி இந்த படத்தினை இதுவரை பார்த்தவர்களில் பாசிட்டிவ் விமர்சனங்களை  அளித்துள்ளார்கள். ஆனால் இந்த படத்தின் மைனஸ் என்றால் அது கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் ஆவது தான் இந்த படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக காணப்படுகின்றது.

இதை தொடர்ந்து கோட் படத்தை பார்ப்பதற்கு விஜய் தனது குடும்பத்துடன் சென்று உள்ள நிலையில், பட குழுவினர் மற்றும் த்ரிஷா, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் பலரும் இன்றைய தினம் கோட் திரைப்படத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளார்கள்.


இந்த நிலையில், கோட் படத்தை பார்ப்பதற்காக தியேட்டருக்கு சென்ற கூல் சுரேஷ் ஆட்டுக்குட்டி ஒன்றை கொண்டு சென்றதுடன் அதற்கு முத்த மழை பொழிந்துள்ளார். அதேபோல புதிதாக திருமணம் முடித்த தம்பதி ஒன்றும் தியேட்டர் வாசலில் மாலை மாற்றிக் கொண்டுள்ள காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


அதேவேளை கோட் படத்தை பார்ப்பதற்கு தியேட்டருக்குள் அணில் வந்ததாகவும் அதனை வீடியோ எடுத்து வெளியிட்டு வைரல் ஆக்கியுள்ளார்கள் ரசிகர்கள். இவ்வாறு கோட்படத்தை பார்த்துச் சென்ற ரசிகர்கள் முதல் அனிமல்ஸ் வரை தற்போது இணையத்தை வைரலாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement