கோட் திரைப்படம் பற்றிய தகவல்கள் தான் இணையத்தை ஆக்ரமித்துள்ளது.  இளையதளபதி நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிய கோட் திரைப்படம் இன்றைய தினம் ரிலீஸாகியுள்ளது. இதனால் திரையரங்கங்கள் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி உள்ளன. 

இந்த படம் சுமார் 5000 தியேட்டர்களில் ரிலீசாக உள்ளதாக ஏற்கனவே இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா தெரிவித்து இருந்தார். இந்த திரைப்படத்தில் அப்பா, மகன் என இரண்டு கேரக்டரில் விஜய் நடிப்பதோடு அதில் மகனாக நடிக்கும் விஜயின் கேரக்டர் மிக இளமையாக காட்டப்படுவதற்காக ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தினை பார்வையிட ரசிகர்கள் உட்பட பல பிரபலங்களும் திரையரங்குகளை நோக்கி விரைந்துள்ளனர். தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு, யுவன் சங்கர் ராஜா, நடிகர் சிவகார்த்திகேயன், திரிஷா என அனேகமானவர்கள் திரையரங்கிற்கு சென்றுள்ளனர்.




                             
                            
                            
                            
                                                    
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!