• Jan 16 2026

Bigg Boss வரலாற்றில் அனைவரையும் பிரமிக்க வைத்த பிக் பாஸ்! வாயை பிளந்த பாடகி! குதூகலித்த ஹவுஸ்மேட்ஸ்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த 2017ஆம் ஆண்டில் ஆரம்பித்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்பொழுது 7ஆவது சீசன் நடைபெற்று முடிவுக்கட்டத்திற்கு வந்துள்ளது.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திருப்புமுனையோடு நடைபெற்று வந்த நிகழ்ச்சி, தற்பொழுது சிறப்பான முறையில் முடிவுக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

கடந்த சீசன்களில் இல்லாத வகையில் இந்த சீசன் முற்றிலும் மாறுபட்டு அமைந்திருக்கின்றது என்றே சொல்ல வேண்டும்.


காரணம் என்னவெனில்,முன்பிருந்த சீசன்களில் எல்லாம் பிக் பாஸ் கதைத்து சிரித்து பேசுவதெல்லாம் இயல்பாகவே காணப்பட்டது. ஆனால் இந்த சீசனில் பிக் பாஸ் பாடல் பாடி அசத்தியிருக்கின்றார்.


அதாவது,இறுதி வாரம் என்பதனால் வீட்டுக்குள்ளே போட்டியாளர்கள் அனைவரும் வந்திருக்கின்றார்கள்.அதே சமயம் பாடகர்களும் வந்து சந்தோசமாக பாடல் பாடி  கொண்டாடிக்கொண்டு இருக்கின்றார்கள்.


அவர்கள் எதிர் பாராத சந்தர்ப்பத்தில் பிக் பாஸ் பாடல் ஒன்றினை பாட அனைவரும் பிரமிப்போடும் சந்தோசத்தோடும் கேட்டு மகிழ்ந்தனர் என்று தான் சொல்ல வேண்டும்.

பிக் பாஸ் வரலாற்றில் இது வரைக்கும் நடைபெற்ற சீசன்களில் இப்படியான நிகழ்வு நடைபெறாததே ஆகும். பிக் பாஸ் பாடிய பாடல் காட்சி தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement